பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெண்கலம் போன்ற உலோகங் களின் மென் தகடுகளாலான

திசை மாற்றுத் தொடுவி.

Laminated construction :அடுக்குக் கட்டுமானம்: குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறுவதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம்.

Laminated core:மென்தகட்டு உள்ளீடு : மின் காப்பிடப் பட்ட இரும்புத் தகடுகளின் அடுக்குகளினாலான ஒரு மின்னக உள்ளீடு. இது உலோகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படாமல் தடுக்கிறது.

Laminated liner:[தானி]அடுக்குக் காப்புறை: உந்து ஊர்திகளில் சுழற்றக் கூடிய பல அடுக்கு உள் வரி உலோகக் காப்புறை.

Laminated plastics : (குழை) அடுக்கு பிளாஸ்டிக்: கனமில்லாமல் வலுவாகவுள்ள பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருள்களை அடுக்கடுக்காக அமைத்துச் செறிவாக்குவதன் மூலம் போதிய வலிமையுள்ள பிளாஸ்டிக் கிடைக்கிறது. இவை தகடுகளாக அல்லது படகின் உடற்பகுதிக்கேற்ப வலுவாகத் தயாரிக்கப்படுகின்றன.

Lamp; (மின்.) விளக்கு: மின் இழை அல்லது சுடர் உள்ள ஒரு சாதனம், இது சூடாகும்போது சுடர்விட்டு ஒளியுண்டாக்குகிறது.

Lamp adapter: (மின்) விளக்குக் கிளைப்பான் : தொலைபேசித் தொடர்பாளரின் கவனத்தைக் கவர்வதற்காக தொலைபேசி, விசைப் பலகைகளில் பயன்படுத் தப்படும் வெண்சுடர் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம்.

Lamp bank: (மின்) விளக்குப் பலகை: விளக்குகளுக்கான பல கொள்கலன்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு பலகை. இந்த விளக்கு கள் கட்டுறுத்தும் கம்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Lamp base: (மின்.) விளக்காதாரம்: ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும்.

Lamp cord: (மின்) விளக்குக் கட்டிழை: இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும்.

Lamp efficiency; (மின்.) ஒளித் திறன்: ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்டாக்குவதற்குத் தேவைப்படும ஆற்றலின் அளவு. இது வாட்டுகளில் குறிப்பிடப்படும். இதனை வாட்/மெழுகு வர்த்தித் திறன் (W.P.C.) என்று குறிப்பிடுவர்.

Lamp socket: (மின்) விளக்குக் குதைகுழி: விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின்