பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Rom

519

Ros


Roman-esque (க.க.) ரோமானிய பாணி: பண்டைய ரோமானிய ரோமாபுரிப் பாணிக்கும் இடை நிலைக் காலத்திய 'கோதிக்' பானிக்கும் இடைப்பட்ட நிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவு மாடங்களும் நிறைந்த சிற்பப் பாணி.

Roof boards or roofers: (க.க.) கூரைப்பலகைச் சட்டம்:கூரை ஓடு களுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்.

Roof truss: (க.க.) கூரைத் தாங்கணைவு: கூரைக்கு ஆதாரமாக ஒன்று சேர்த்துப் பிணைக்கப்பட்டுள்ள மரத்தினாலான அல்லது இரும்பினாலான ஆதாரக்கட்டு.

Root: (எந்.) வர்க்க மூலம்: கணிதத்தில் ஓர் எண்ணின் பெருக்க மூலம்.

Root diameter: (எந்.) ஆதார விட்டம்: ஒரு திரிகிழையின் ஆதார விட்டம்.

ஒரு பல்லிணைச் சக்கரத்தில் பல்லின் அடிப்புறத்தில் உள்ள விட்டம்.

Rope drilling: கயிற்றுத் துரப்பணம்: கயிற்றினால் இயங்கும் துரப்பணத்தால் துளையிடுதல்.

Rope driving : (எந்.பொறி.) கயிற்று இயக்கம்: கயிற்றுப் பல் பல்லிணை மூலம் விசையை மாற்றம் செய்தல். இது வார்ப்பட்டை இயக்கத்திலிருந்து வேறுபட்டது.

Rosebit: (எந்.) துளையிடு கருவி

துரப்பணத் துவாரங்களுக்கு மெருகேற்றும் திண்மையான நீள் உருளை வடிவ இணைத் துளையிடு கருவி.

Rose cutter: (பட்.) பட்டை வெட்டு கருவி: அரை உருள் வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட பட்டை வெட்டுகருவ

Rose-engine:கடைசல் பொறி: ஒரு வகைக் கடைசல் பொறி அமைவு

Rosendale cement: ரோசண்டேல் சிமெண்ட்: நியூயார்க் அருகிலுள்ள ரோசண்டேல் அருகில் கிடைக்கும் இயற்கை சிமெண்டுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர்.

Rose reamer:(எந்.) பட்டைத் துளைச் சீர்மி: உலோகங்களில் துளையிடுவதற்கான பொறியமைவு. இதில் பக்கங்களுக்குப் பதிலாகச் சாய்வாகவுள்ள நுனி மூலம் வெட்டுதல் நடைபெறுகிறத

Rose window: (க.க.) ரோசாப் பலகணி: ரோசாப்பூ வடிவில் அமைந்த பலகணf.

Rosette: (க.க.) ரோசாப் பூவணி: ரோசா வடிவத்திலான பூவணி வேலைப்பாடு.

Rose wood: (மர.வே.) கருங்காலி: கறுப்பு நிறமுள்ள. கனத்த, கடினமான, எளிதில் உடையக்கூடிய மரம். மேலடை மெல்லொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது