பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Rosin: மண்டித்தைலம்: தேவதாரு மரங்களிலிருந்து பிசின் வடிவில் கிடைக்கும் பொருள். வெள்ளீய வேலைப்பாடுகளில் பற்ற வைப்பதற்கான உருகுபொருளாகப் பயன்படுகிறது. வண்ணங்கள், சோப்புகள் செய்வதற்கும் பயனாகின்றது.

Roster: வேலை முறையேடு: ஒர் அட்டவணை அல்லது பெயர்ப் பட்டியல்.

Rostrum : (க.க.) உரை மேடை: பொதுவில் உரையாற்றுவதற்குப் பயன்படும் பேச்சு மேடை.

Rotary : சுழல் பொறி : ஒரு சக்கரம் போல் தனது அச்சில் சுழலும் பொறி.

Rotary converter : (மின்.) சுழல் ஒரு போக்கி : மாற்று மின்னோட் டச் சுற்று வழியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பொறி. இது நேர் மின்னோட்டத்தை அல்லது மாற்று மின்னோட்டத்தை வழங்கும்.

Rotary cutter : (எந்.) சுழல் கத்தி : ஒரு சுழல் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள, சுழலும் கத்தி. இது சுழலும் போது வேலைப்பாடு செய்யப்படும் பொருள் வெட்டப்படுகிறது.

Rotary engine : (வானூ.) சுழல் எஞ்சின் : ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள்

41

Rot

518

Rot


கொண்ட ஒர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத்தண்டினைச் சுற்றிச்சுழலும்.

Rotary induction system: (வானூ.) சுழல் தூண்டல் முறை: ஆரை எஞ்சின்கள் மீது பயன்படுத்தப்படும் எரி-வளி கலப்பித் தூண்டல் முறை. இதில் எரிபொருள் செறிவினை நீர் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்வதில் ஒரு சுழல் விசிறி உதவுகிறது.

Rotary press: (அச்சு.) சுழல் அச்சு எந்திரம்: சுழல் முறையிலான அச்சுப் பொறி. இதில் அச்சிடும் பரப்பு ஒரு சுழலும் நீள் உருளையுடன் பிணைக்கப்பட்டிருக்கும். ஒர் உருளைச் சுருளிலிருந்து காகிதம் ஊட்டப்படும்.

Rotogravure: (அச்சு.) சுழல் செதுக்குருவ அச்சு வேலை: ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைப்பாட்டிலிருந்து ஒருசுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சுவேலை.

Rotor: (வானூ.) சுழலி: (1) விமானத்தில் ஒரு சுழல் சிறகு அமைப்பி லுள்ள முழுச் சுழற்சிப் பகுதி.

(2) ஒரு மாற்று மின்னோடியின் அல்லது மின்னாக்கியின் ஒரு சுழல் உறுப்பு.

Rotor-craft: (வானூ.) சுழலி விமானம்: எல்லா உயரங்களிலும் சுழலி அல்லது சுழலிகளினால் முழுமையாக அல்லது பகுதியாகத்