பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழவழப்பாக்குவதற்குப் பயன்படும் இழைப்புக் கருவி. தளங்களையும், பெரிய பரப்புகளையும் மட்டப்படுத் துவதற்கும் இது பயன்படுகிறது.

Scratch: கீறல்: மேற்பரப்பில் ஏற்படும் கீறல், கீறுதடம் அல்லது கீற்றுவரி,

Scratch awl:(பட்.)கீற்றுத் தமரூசி: உலோகத்தில் குறியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூர்முனையுடைய எஃகுத் தமருசி.

Scratch brush: கீற்றுத் தூரிகை: உலோகப் பரப்புகளிலிருந்து அயல் பொருள்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியிலான துாரிகை.

Scratch coat: (க.க)கீற்றுப் பூச்சு: அடுத்துவரும பூச்சுகளுக்குப் பிடிப்பு ஏற்படுத்துவதற்காகக் கீற்றுக் கீற் றாகப் பூசப்படும் முதற்பூச்சு.

Screen: (அச்சு.) கண்ணாடித் திரை: ஒளி, நிழல் மாறுபாட்டளவைக் காட்டுகின்ற நுண்பதிவுப் படச் செதுக்ககோவிய அச்சடிப்பில் பயன்படுத்தப்படும் வரியிட்ட கண்ணாடித் திரை.

Screenings: சல்லடைக் கழிப்பு: சிப்பங்கட்டவும் அட்டை போடவும் பயன்படும் மலிவான காகிதம்.

Screw: (எந்.) திருகாணி: மேல்வரி அல்லது அகல்வரிச்சுற்றுடைய திருகுசுரை.

Screw adjusting caliper: (எந்.)

Scr

528

Scr


திருகு விட்டமானி: திருகு அமைப்புடைய வட்டமானி. இதில் நுட்பமானச் சீரமைவுக்கேற்ற வில் சுருள் அமைந்த திருகாணி அமைப்பு உள்ளது.

Screw cutting lathe: (எந்.) திருகுவரிக் கடைசல் எந்திரம்: திருகாணி வரிகளை வெட்டுவதற்கேற்ற கடைசல் எந்திரம்.

Screw driver: திருப்புளி: திருகாணிகளின் கொண்டையிலுள்ள வரிப்பள்ளத்தில் நுனியை வைத்துத் திருப்புவதற்கான எஃகுக் கருவி.

Screw jack (பொறி.) திருகு கோல்: வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகுநிலை உதை கோலமைவு.

Screw plate: (எந்.) திருகு வெட்டுத் தகடு: திருகுபுரிகளை வெட்டுவதற்கான துளைகளையுடைய எஃகுத் தகடு.

Screw threads: (எந்.) திருகுபுரி: திருகாணிச் சுரையின் உட்சுற்றுத்திருகுபுரி.

Scribe awl or scriber: வரைகோல்: மரக்கட்டை, செங்கல் முதலியற்றில் கோடுகள் வரைவதற்கான கூர்மையான கருவி.

Script: (அச்சு.) அச்சுருக்கையெழுத்து: கையெழுத்து போன்று வடிவமைத்த அச்சுரு.

Scroll; சுருள் போதிகை: சுருள்வடி