பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Semi transparent: ஓரளவு ஒளி ஊடுருவும் பொருள்: ஒளி ஒரளவு ஊடுருவிச்செல்லக்கூடிய பொருள். இதில் பொருள் அரைகுறையாகவே தெரியும்.

Sensible heat (பொறி.) உணர்வெப்பம் : வெப்பமானி மூலம் அளவிடக்கூடிய வெப்பம். இது உட்செறி வெப்பத்திற்கு மாறானது.

Separately excited generator : (மின்.) பிறிதின் கிளர்ச்சி மின்னாக்கி : தனது காந்தப் புலத்திற்குத் தேவையான மின்னோட்டத்தை அதற்கு வெளியிலுள்ள ஆதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் ஒர் எந்திரம்.

Separators : (தானி; மின்.) பிரிப்புக் கருவி : ஒரு மின்கலத்தின் தகடுகளுக்கிடையே மின் காப்புகளாகப் பயன்படுத்தப்படும் கருவி. இவை மரத்தினாலோ வேறு சிறப்புப் பொருள்களாலோ செய்யப்பட்டதாகவும், மின் பகுப்புப் பொருளின் சுழற்சியை அனுமதிக்கக் கூடிய நுண் துளைகளை உடையதாகவும இருக்கும்.

Sepia : (வண்.) பழுப்பு வண்ணம்: சிவப்பு நிறங்கலந்த பழுப்பு வண்னம்.

Septic tank : (கம்.)நச்சுத்தடை மலக்குழி : திடக்கழிவுப் பொருள்களை மட்கும்படி செய்வதற்கான ஓர் அமைப்பு. இதில் கழிவுப் பொருள்களை இயற்கையான

Seq

537

Ser


பாக்டீரிய நடவடிக்கை மூலம் திரவமாகவும், வாயுவாகவும் மாற்றி மட்கும்படி செய்யப்படுகிறது. இது முழுமையாகச் சுகாதார முறைப்படி அமைந்ததாகும்.

Sequence : வரிசை முறை : திட்டமிட்ட நிரலொழுங்கு முறை.

Serial taps : (எந்.) :தொடர் குழாய்கள் : 1, 2, 3 என்ற வரிசை அமைக்கப்பட்ட தொடர்கள், 1 ஆம் எண் குழாய் கூம்பு வடிவில் இருக்கும். 2 ஆம் எண் குழாய் நுனியில் மட்டும் சற்றுக் கூம்பியிருக்கும். 3 ஆம் எண் குழாய் திருகிழை அமைந்ததாக இருக்கும்

series : (மின்.) மின்கல அடுக்கு வரிசை : ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வரிசையாக மின் னோட்டம் பாயுமாறு அமைந்த மின்கல அடுக்கு வரிசை.

Series circuit :தொடர்மின் சுற்றுவழி :

Series dynamo (மின்.) தொடர் நேர் மின்னாக்கி: இது ஒரு நேர் மின்னாக்கி, இதில் மின்னகமும், புலமும் உள்முகமாகத் தொடர் வரிசையில் இணைக்கப்பட்டிருக்கும்.

Series motor : (மின்.) தொடர் மின்னோடி : மின்னகமும் புலமும் தொடர் வரிசையில் இணைக்கப் பட்டுள்ள ஒரு நேர்மின்னாக்கி மின் உயர்த்திகள் போன்ற வெவ்வேறு பாரங்கள் ஏறும் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.