பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sho

532

Shr


இறங்கவும் ஏற்ற வகையில் கட்டப்பட்ட விமானம்.

Shock : (பொறி.) அதிர்வு :திடீரென விசையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் திடீர் அதிர்ச்சி.

Shock absorber : (வானூ.) அதிர்வு தாங்கி : விமானம் தரையில் இறங்கும்போதும், தரையிலிருந்து ஏறும்போதும் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதி.

Shoe: (எர்.) உராய்வு தடைக் கட்டை: ஊர்திகளின் சக்கர உராய்வு தடைக் கட்டை.

Shopwork:பட்டறைப் பணி: பட்டறையில் செய்யப்படும் எந்திரவியல் பணி.

Shore: (பொறி.) உதைவரிக்கால்: கப்பல்கட்டு தளத்தில் கப்பலைத் தாங்கி நிற்க வைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச் சாய்த்து நிற்க வைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச் சாய்த்து நிறுத்தப்படும் வரிக்கைக் கட்டைகள்.

Shoring: (க.க.) உதை வரிக்காலிடுதல்: உதை வரிக்கால் கொடுத்து தாங்கி நிறுத்துதல்.

Short circuit: (மின்.) மின்குறுக்குப் பாய்வு: மின் சுற்றுவழியில் குறுக்கு வெட்டாக நிலம்பாவி மின் னோட்டம் நின்றுவிடுதல்,

Short circuit fault: மின் முடிப்புப் பிழை:

Short line: குறுமின்வழி :

Short-time duty: (மின்.) குறுகிய நேர மின்னோட்டப் பணி: ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு ஒரே சீரான அளவில் மின்னோட்டம் தேவைப்படும் பணி.

Short ton: குறு எடையளவு: இரண்டாயிரம் கல் எடை அளவு,

Short-wave radio: குற்றலை:பத்து முதல் நூறு மீட்டர் வரை நீளமுள்ள வானொலிச் சிற்றலை.

Short weight: குற்றெடை :ஒன்றுக்குக் குறைந்த அலகுடைய சில்லறை எடை.

Shrine: (க,க.) கோயில்: புனிதப் பேழை:

Shrinkage: (வார்.) அளவுக்குறுக்கம்: வார்ப்படத்தைக் குளிர்விக்கும் போது அதன் வடிவளவையும், எடையையும், உருவத்தையும் துல்லியமாக இருத்தி வைத்துக் கொள்வதற்காகச் சுருங் கும் அளவு.

Shrinkage crack :(வார்.) சுருங்கு வெடிப்பு: வார்ப்படத்தின் உறுப்புகளை ஏற்றதாழ்வுடன் குளிர்விக் கும் போது வார்ப்படத்தில் உண்டாகும் வெடிப்பு.

Shrink holes in castings: (வார்.) வார்ப்படச் சுருங்கு துளைகள்: ஏற்றத்தாழ்வான குளிர்விப்பு மூலம் வார்ப்பட உறுப்புகளில்