பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sid

534

Sil


Side stitch ; (அச்சு.) பக்கத்தைப்பான் : நூல்களைக் கட்டுமானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள்.

Siding : (க.க.) புடைமரம் : கட்டிடத்தின் புறச் சுவர்களுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படும் வெட்டு மரம்.

Sieve : (க.க.) சல்லடை : மணலிலிருந்து பெரிய கற்களைப் பிரித்தெடுப்பது போன்று, பொருள்களை வடிவளவுக்கேற்பப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் சலித்துப் பிரிக்கும் கருவி.

Signal: தொலைக்காட்சி சைகை : தொலைக் காட்சிகளை ஒளி பரப்புவுதில் இரு வகைச் சைகைகள் உண்டு. ஒன்று பட அல்லது ஒளிச் சைகை; இன்னொன்று ஒலிச் சைகை. ஒவ்வொரு சைகையும் அது ஒலியை அல்லது ஒளியை அனுப்புவதற்கேற்ப மின்னியல் தூண்டல்களைக் கொண்டிருக்கும்.

Signature : (அச்சு.) அச்சு முழுத்தாள் வரிசைக் குறி : ஒரு நூலில் பல்வேறு பிரிவுகள் எந்த வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுவதற்காக ஒவ் வொரு பக்கத்திலும் அச்சிடப்படும் எண் குறியீடுகள்.

Silica : சிலிக்கா (SiO2) : மணலிலும் பளிங்குக் கல் வகைகளிலும்

பெருங் கூறாய் அமைந்த மணற் சத்து.

Silicon : (கணி.) சிலிக்கன் : உலோகமல்லாத, மணற்சத்து பெருமளவாகவுள்ள ஒரு தனிமம். கார்பனையும், பளிங்குக்கல்லையும் ஒரு மின் உலையில் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. எஃகுத் தயாரிப்பில் கெட்டியாக்குவதற்கும் ஆக்சிகர நீக்கத்திற்கும் இது பயன்படுகிறது.

Silicon carbide : சிலிக்கன் கார்பைடு: மின் உலையில் மணல், கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாக்கும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும் பொருளாகவும் உராய்வுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது கார்போரண்டம், கிறிஸ்டோலான் கார்போஃபிராக்ஸ், கார்போரா , கார்போரைட், கிரிஸ்டோலைட் என்று பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Silicon copper : (உலோ.) சிலிக்கன் செம்பு : துவாரங்கள், புடைப்புகள், இல்லாமல் சுத்தமான, திண்மையான வார்ப்படங்கள் தயாரிப்பதற்காக உருகிய செம்புடன் சேர்க்கப்படும் செம்பு மிகுதியாக அடங்கிய ஒரு வகை உலோகக் கலவை.

Silicon steel:(உலோ) சிலிக்கன் எஃகு: 1% முதல் 2% வரை