பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ski

538

Sky


சக்கரம்: விமானம் ஓடுபாதையில் ஒடும்போது அல்லது தரையிறங்கும் போது அதற்கு உதவியாக இருக் கும் தரையிறங்கு பல்லிணையின் ஒர் உறுப்பு.

உந்துவிசைக் கட்டை: உந்து ஊர்தியில் சக்கரத்தை உந்தித் தள்ளும் சாய்வு உந்துவிசைக் கட்டை,

Skid fan: சக்கரச் சுழற்சித் தடை காப்பு:

Skid fin: (வானூ.) சறுக்கு நிமிர் நேர் விளிம்பு: விமானத்தில் கிடைமட்ட உறுதிப்பாட்டை அதிகரிப் பதற்காகச் சிறகுக்கு மேலே பொருத்தப்பட்டுள்ள நிமிர்நேர் விளிம்புடைய தகடு.

Skidding:(வானூ.) பக்கச் சறுக்கு: விமானம் திரும்பும்போது பக்கவாட்டில் சறுக்குதல்.

skimmer : (வார்.) ஏடு எடுக்கும் கரண்டி : வார்ப்பட வேலையில் உருகிய உலோகத்தின் மேற் பரப்பில் படிந்திருக்கும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுப்பதற்குப் பயன்படும் கரண்டி.

Skimming : (வார்) ஏடு எடுத்தல்: உருகிய உலோகத்தை ஊற்றும்போது படியும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுத்தல்.

Skin : மென்தோல் : விலங்கிலிருந்து எடுக்கப்பட்ட பதப்படுத்திய அல்லது பதப்படுத்தாத மெல்லிய தோல் .

Skinning : (மின்.) மின்காப்பி உரிப்பு : மின்னிணைப்பிகள் கொடுப்பதற்கு முன்பு மின் கடத்தி களிலிருந்து மின் காப்பிகளை உரித்தெடுத்தல்.

Skirting : (க.க.). அகச்சுவரோரப்பட்டி : சுவரும் தரையும் சந்திக்குமிடத்தில் சுற்று விளிம்பாக அமைக்கப்பட்டுள்ள பட்டை.

Skiver : தோலாடை: தோலைச் சீவிப் பெறப்படும் மென்தோல் இது புத்தகக் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது.

Skiver leather : சீவிய மென் தோல் : தோலைச் சீவிப் பட்டையாக எடுத்த மெல்லிய தோல். அட்டைப்பெட்டிகள், பணப்பை முதலியவற்றில் உள்வரியிடவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகி றது.

Skylight : (க க.) மேல்தளச் சாளரம் : கட்டிட மேல் முகட்டில் அல்லது கூரையில் வெளிச்சத்திற்காக அமைக்கப்படும் கண்ணாடிச் சாளரம்.

Skyscraper : (க.க.) வானளாவி: இன்றுள்ள அலுவலகக் கட்டிடங்களைப் போன்று பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடம்,

Sky sign : மீமுகட்டு விளம்பரம் : உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களில் காட்டப்படும் ஒளி விளக்க விளம்பரம்,