பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sol

544

Sol


கருதிய கதிரொளிக் கண்ணாடி மனை

solder: (உலோ.) பற்றாக: உலோகங்களை வெப்பத்தின் மூலம் பற்ற வைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகக் கலவை. இது பொதுவாக ஈயமும், வெள்ளீயமும் சம அளவில் கலந்ததாக இருக்கும். இதன் உருகுநிலை சுமார் 188°C (870.4°F)

Soldering: (எந்.) இடையிணைப்பு: ஒத்திராத உலோகங்களை அல்லது உலோகக் கலவைகளை உரிய வெப்ப நிலையில் பற்றாசு வைத்து இணைத்தல்.

soldering copper: (எந்.) பற்றாகச் செம்பு: பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை 'இடையிணைப்பு இரும்பு' என்றும் அழைப்பர்.

Soldering iron: பற்றாசுச் சூட்டுக்கோல்: பற்றாக வைக்கப் பயன்படும் கொதிநிலைச் சூட்டுக்கோல்.

Sole: (க.க.) அடிக்கட்டுமானம்: குமிழ் முகப்பினைத் தாங்குவதற்கான அடித்தளத்தின் உச்சியில் அமைக்கப்படும் அடிக்கட்டுமானம்.

Solenoid: (மின்.)மின் கம்பிச் சுருள் உருளை: ஒரு மின் கடந்தத் திருகு சுழல். ஒரு நேரான அல்லது வளைவான அச்சினைச் சுற்றி ஒரே திசையில் சமமான வட்ட

மின்னோட்டம் பாயும் ஒர் அமைப்பு.

Solenoid relay : (தானி;மின்.) மின்உருளை அஞ்சல்: சேற்றுத் தடைக்கட்டையிலுள்ள ஓர் அழுத்துபொத்தான் மூலம் இயக்கப்படும் தொடக்க மின்னோடி மின் சுற்று வழியை முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒருவகை விசை.

Sole blate : (பொறி.) எந்திர அடித்தட்டு : ஒர் எந்திரத்தை வைத்து பிணைப்பதற்கான ஒர் அடித்தட்டு.

Solid angle : பல்தளக் கோளம்: ஒரு புள்ளியில் சந்திக்கும் பல்தளக் கோளங்களின் தொகுதி

Solid bearing : (எந் ) திடத் தாங்கி: ஒரே துண்டான கெட்டியான தாங்கி. திடத்தாங்கிகள் பொருத்தப்படும் உறுப்புகளில் திடத்தாங்கிகளை அழுத் தி ப் பொருத்தியதும் அது இருசு உருளை எனப்படும்.

Solid friction : (எந்.) திட உராய்வு: ஒரு திடப்பொருளின் மேற்பரப்பு, இன்னொரு திடப் பொருளின் மேற்பரப்பின் குறுக்கே நகரும் போது உண்டாகும் உராய்வு.

Solo : (வானூ.) தனிப்பறப்பு: விமானத்தில் துணையில்லாமல் தனியாகவே பறத்தல்.

Soluble : கரையத்தக்க :ஒரு திரவத்தில் கரையத் தக்க.