பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spectro photometer: வண்ண அளவுமானி: வண்ணச் செறிவினை அளவிட்ட றிய உதவும் சாதனம்.

Spectrogram: வண்ணப்பட்டைப் பதிவு ஒளிப்படம்.

Spectrograph:வண்ணப்பட்டை ஒளிப்பதிவுக் கருவி.

Spectrography: வண்ணப்பட்டைப் பதிவு ஒலிப் படப்பிடிப்பு.

Spectroheliograph:ஓரலைப் பதிவு ஒளிப்படக் கருவி: கதிரவன் ஒளி வண்ணப்பட்டையின் ஒரலைப் பதிவு ஒளிப்படக் கருவி.

Spectrohelioscope: ஓரலை நீர்க் காட்சிக் கருவி: கதர் மண்டல ஒரலை நீளக்காட்சி.

Spectroscope: (வேதி.) வண்ணப்பட்டை ஆய்வுக்கருவி: வண்ணப் பட்டை அளவாய்வுக்கான கருவி,

ஆவியான பொருள்கள் உண்டாக்கும் வண்ணப்பட்டை அவற்றின் அமைப்பை ஆராய்வதற்குப் பயன்படுகின்ற ன.

Spectroscopy: வண்ணப்பட்டை ஆய்வியல்:

Spectrum: (இயற்.) நிறமாலை:சூரிய ஒளியை அதில் அடங்கியுள்ள ஏழுவண்ணங்களாகப் பகுக்கலாம். இந்த ஏழுவண்ணங்களையும் வானவில் வண்ணங்களில் காணலாம். இந்த வண்ணங்களின் தொகுதி நிறமாலை எனப்படும்,


Spe

547

Sph


Spectrum analysis: நிறமாலைப் பகுப்பு.

Speculum metal: (உலோ.) பளிங்கு உலோகம்: தொலை நோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பும் வெள்ளீயமும் கலந்த கலவை.

Speed (இயற்.) வேகவீதம்: ஒரு பொருள் விரைந்து செல்லும் வேகத்தின் வீதம்

Speed control: வேகக் கட்டுப்பாடுபாடு: தொலைக்காட்சிப் பெட்டியில் படங்களை கிடைமட்டத் திலும் செங்குத்தாகவும் நிலைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கான சாதனம்.

Speedometer: (தானி.) வேகமானி: வேகவீதத்தை ஒரு மணிக்கு இத்தனை மைல் என்ற வீதத்தில் பதிவுசெய்து காட்டும் ஒரு கருவி.

Spelter: (உலோ.) துத்தநாகம்: வாணிக வழக்கில் ஸ்பெல்ட்டர்’ என்று அழைக்கப்படும் உலோகம். துத்தநாகமும், செம்பும் சம அளவில் கலந்த உலோகக் கலவையையும் இது குறிக்கும்.

Sphalerit: (கணி.) நாகக் கனிமம்: "ஸ்பாலிரைட்" எனப்படும் துத்த நாகத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள்.

sphere : கோளம்: பந்து வடிவப் பொருள். இதன் ஒவ்வொரு பகுதியும் அதன் மையத்திலிருந்து சம தூரத்தில் இருக்கும்.