பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உட்பட மெருகேற்றுவதற்குப் பயன்படும் திரவப் பொருள்கள்.

Sprig : (மர.வே.) எடைக் கருவி: திருத்தப்பட்ட விறைப்பு:விற்கருள். ஒரு கூட்டில் அடைக்கப்பட்டுள்ள ஒர் எடை பார்க்கும் கருவி. இதில் அளவு குறிக்கப்பட்ட அளவு கோலில் ஒரு முள் எடையைக் காட்டும்.

Spring chuck or spring collet : (எந்.) விற்கருள் கவ்வி : திருகு பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்படவேண்டிய பொருளில் பொருத்தி அழுத்தி மூடப்படும் அழுத்தம் தளர்த்தப்படும்போது விற்கருள் போதிய அளவு விரிந்து பொருள் விடுவிக்கப்படுகிறது.

Spring clip: (தானி.) விற்சுருள் பற்றுக் கருவி : விற்கருளை இருசுடன் இணைப்பதற்குப் பயன்படும் U-வடிவ மரையாணி. இருசுடன் விற்கருளை இணைப்பதற்கு இரு பற்று கருவிகள் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விற்கருளையும் பொருத்துவதற்கு இரு பற்று கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Springer : (க.க.) கவான் அடிக்கல்: மஞ்சடைப்பு மேல் முகட்டின் அடிக்கல்.

Spring hangers : (தானி.) விற்சுருள் கொக்கி: உந்து ஊர்தியின் சட்டத்தில் விற்கருள்கள் இணைக்

Spr

551

Spu


கப்படுவதற்குப் பொருத்தப்பட்டுள்ள கொக்கி.

Spring hinge: (க.க.) விற்கருள் கீல்: உள்ளே ஒரு விற்கருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவு களைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படு கிறது.

Spring leaf : (எந்.) விற்சுருள் அலகு: உந்து ஊர்திகளில் பயன்படும் விற்சுருளின் தட்டை அலகு.

Sprinkler system: (தானி.) விற்சுருள் இருசு: விற்கருள்கள் பொருத்தப்படும் இருசுகளின் தட்டையான மேற்பரப்புகளில் ஒன்று.

Sprinkler system: (க.க.) தெளிப்புக் குழாய்: தீப்பிடிக்கும் போது தானாகவே நீரைத் தெளிக்கும் தெளிப்பு முனைகளுடைய குழாய் அமைப்பு.

Sprocket: (எந்.) கண்ணிப் பல்: சங்கிலிக் கண்ணிச் சக்கரப் பல்.

Sprocket-wheel: கண்ணிப் பற்சக்கரம்:

Spruce: (வார்.) உலோக வார்ப்புக் குழி: உருகிய உலோக வார்ப்புக் குழி.

Spur (மர.வே.) பலகை வெட்டி:நீண்ட மரக்கட்டைகளிலிருந்து பல்வேறு நீளங்களில் மென் வொட்டுப் பலகைகளை வெட்டுவதற்குப் பயன்படும் கூரிய முனையுடைய கருவி.