பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Stability : திடநிலை : உறுதிப் பாட்டுடன் அல்லது திடத்தன்மையுடன் இருக்கும் நிலை,

விமானத்தில் சமநிலையூட்டும் மீட்சியாற்றல்.

Stabilizer : (வானூ.) விமானச் சமநிலையமைவு : விமானத்தின் சம நிலையூட்டும் மிகைத்தளம். இது விமானத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இது விமானம் தலைகுப்புறக் கவிழாமல் தடுக்கிறது.

Stable equilibrium! உறுதிச் சமநிலை : பொருள்கள் எளிதில் அசைக்க முடியாமல், உறுதியான பீடத்தில் இருத்தல்.

Stable oscillation : (வானூ.) உறுதியான ஊசலாட்டம் : வீச்சளவு அதிகரிக்காமல் இருக்கும் ஊசலாட்டம்.

Stack : (க.க.) புகைக் கூம்பு : தொழிற்சாலைகளில் உள்ளது போன்ற புகையை வெளியேற்றுவதற்கான பெரிய புகைக்கூம்பு. இது செங்கல், கல் அல்லது உலோகத் தகட்டினால் அமைக்கப்பட்டிருக்கும்.

Staging : (க.க.) சாரக்கட்டு: கட்டிடத்திற்கான சாரங்கட்டுதல்.

Staging port: இடைத் தங்கு தளம்: விமானப் பயணத்தில் நிலவரமான இடைத்தங்குதளம்.

48

Sta

558

Sta


Stainless steel : (உலோ.) துருப்பிடிக்கா எஃகு: குரோமியம் அதிக அளவிலும் நிக்கலும், செம்பும் சிறிதளவிலும் அடங்கிய உலோகக் கலவை. இந்த எஃகு கடினமானது: உரமானது; நிலையான மெருகுடையது.

Stairs ; (க.க.) படிக்கட்டு: ஏணிப் படிகளின் தொகுதி. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு வளைவின்றிச் செல்லும் படிக்கட்டு 'நேர் படிக்கட்டு', திருகு சுழலாகச் செல்லும் ஏணிப்படி சுழற் படிக்கட்டு" .

Stakes: (உலோ.வே.) மரமுளை: உலோகத் தகட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள். வளைப்பதற்கும், வடிவமைப்பதற்கும் பலகை மீது பயன்படுத்தும் பல்வேறு வடிவளவுகளிலுள்ள மரமுளை.

Stake-boat. நெறிகுறிப் படகு: படகுப் பந்தயப் பாதை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள படகு.

Staking out: (க.க.) எல்லை குறித்துக் காட்டுதல் : கட்டுமானம் கட்டுவதற்கான அடித்தள எல்லையைக் குறித்துக் காட்டுதல்.

Stalagmit: பொங்கூசிப் பாறை: கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தி னின்றும் மேல்நோக்கி ஊசி வடிவில் வளரும் சுண்ணக் கரியகப் பாறை.