பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sto

583

Sto


அல்லது வாயிற்படி,

Stop: (எந்:க.க.) தடுப்புக்குமிழ்: ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் செல்லாமல் கட்டுப்படுத்தும் தடுக் கிதழ். ஒரு பட்டறையிலுள்ள எந்திரத்தில் அல்லது ஒரு கட்டிடத்தின் கதவில் உள்ள தடைக்கருவி போன்றது.

Stop-clock : நிறுத்தமைவுக்காரம்: தேவையானபோது நிறுத்தவும் ஓட்டவும் அமைவு கொண்ட கடிகாரம். விளையாட்டுப் பந்தயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

Stop cock:(கம்.)நெகிழ்வுக்குழாய்: மூடவும் திறக்கவும் வல்ல குழாய்.

Stop-collar: (எந்.) தடைக்கட்டு வளையம்: எந்திர உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு.

Stop-cylinder: (அச்சு) தடை அச்சுப் பொறி: அச்சுப் பொறி வகை

Stop-drill: தடுப்புத் துரப்பணம் : சுழல்வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி.

Stop-plate : இருசு வரைத் தகடு : உராய்வுத் தடைக் குழைகள் மீது மோதாமல் இருக்க தடுக்கும் அமைவு.

Stop valve: தடுக்கிதழ் அடைப்பு : நீர்மத் தடுக்கிதழ் அடைப்பு.

Stop watch: விசையழுத்த மணிப்

பொறி: ஒட்டப் பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குவதற்கும் நிறுத்தத்திற்கும் உரிய பொறியமை வுடைய கைக்கடிகாரம்.

Storage battery : (மின்.) சேம மின்கலத் தொகுதி: சேம மின்கலங்களின் ஒரு தொகுதி. இக் கலங்கள் ஒவ்வொன்றிலும் நேர்மின் தகடுகளும் நீர்த்த கந்தக அமில மின் பகுப்பானில் மூழ்க வைக்கப்பட்டிருக்கும்.

Storage cell: (மின்.) சேம மின்கலம்: ஒரு சேம மின்கலத் தொகுதியின் ஒரு பகுதி.

Storage life : (குழைம.) மசிவுக் காலம் : ஒரு குறிப்பிட்ட சேம வெப்ப நிலையைப் பொறுத்து, ஒரு பிசினை அதன் குண இயல்புகளோ, மசிவுத்தன்மையோ குன்றாமல் சேமித்து வைக்கக் கூடிய கால அளவு.

Stored energy welding : சேம ஆற்றல் பற்றவைப்பு : ஒரு வகைத் தடைப் பற்றவைப்பு. இதில் பற்ற வைப்பதற்குத் தேவையான மின்னாற்றல், பொருத்தமானதொரு சேமக்கலத்தில் பற்ற வைப்பதற்கு முன்பு குறைந்த வீதத்தில் சேர்த்து வைக்கப்பட்டு, பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் வழங்கப்படுகிறது.

Storm door : (க.க.) வன்புற மிகைக் கதவு : புயல் குறிக் கூம்புடன் கடும்புயல் எச்சரிக்கையாக