பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sub

566

Sul


Sub cloud car; (வானூ.) முகிலடி ஆய்வு ஊர்தி: விண்கலத்திலிருந்து மேகத்திற்குக் கீழே ஒரு நிலைக்குக் இறக்கக்கூடிய ஒர் ஆய்வு ஊர்தி

Sub head: (அச்சு.)துணைத் தலைப்பு: அச்சுப் பணியில் உட் தலைப்பு.

Submarine:நீர்மூழ்கி : கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்க வல்ல போர்க் கப்பல்.

Sub-strato-sphere: அடி மீவளி மண்டலம் : மீவளி மண்டலத்திற்குக் கீழே உள்ள பூமி மண்டலத்தின் படுகை. இதில் மிக உயரப் போக்குவரத்து நடவடிக்கைகள் நடத்தப் பெறுகின்றன.

Substratum: கீழடுக்கு :அடித்தள அடுக்கு.

Substructure: (க.க.) கீழ்க் கட்டுமானம் : ஒரு கட்டுமானத்தின் கீழ்ப்பகுதி. இதன் மேல் எதனையும் கட்டுவர்.

Subtangent : தொடுவரை நீட்டம் : ஊடுவரையில் தொடு வரை நீட்டம்.

Suction : பற்றீர்ப்பு : உறிஞ்சி எடுத்தல்.

Suction - fan: பதர் உறிஞ்சி : தானியத்திலிருந்து பதர் வாங்கி விட உதவும் உறிஞ்சு விசிறி.

Suction stroke:உறிஞ்சி வீச்சு : நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு .

Suede calfskin : வறுதோல் : கையுறை, காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப் படாத வெள்ளாட்டுக் குட்டித் தோல், இது உயர்தரமான தோல். இது நேர்த்தியான உள்வரித் துணி யாகப் பயன்படுத்தப்படுகிறது.

Sulphated battery: (க.க.) கந்தகி மின்கலத் தொகுதி : மின்னேற்றக் குறைவு அல்லது குறைந்த நீர் மட்டம் அல்லது இவ்விரண்டும் காரணமாக வெள்ளை நிறக்கந்தகி (சல்பேட்) பூசப்பட்ட தகடுகளுடைய சேம மின்கலத் தொகுதி.

Sulphaté paper: கந்தகிக் காகிதம் : முற்றிலும் கந்தகிக் (சல்பேட்) கூழினால் செய்யப்பட்ட காகிதம். இது சில சமயம் சலவை வெண்மையாகவும், பழுப்பாகவும் சாயமிட்டதாகவும் இருக்கும்

Sulphite bond : கந்தகியத் தாள்: உறுதி வாய்ந்த உயர்தரத்தாள், இது நான்கு வகைகளில் கிடைக்கும். முதலிரு உயர்வகைகள் எழுதுதாள் உற்பத்தி வாணிக மரபுகளுக்கேற்ப நீர்க் குறியிடப்பட்டிருக்கும்.

Sufphite pulp : கந்தகியக் கூழ் : ஊசியிலை மரம் மற்றும் அது போன்ற மரங்களிலிருந்து சல்பைட் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மரக்கூழ்.

Sulphur : (வேதி.) கந்தகம் (S): இரும்பிலும் எஃகிலும் கந்தகம் அடங்கியிருப்பதால் எப்போதும் விரும்பத்தகாத விளைவுகளே ஏற்