பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



SyC

570

Sin


Sycamore : (மர. வே.) அத்தி மரம் : 150’ உயரம் வளரக்கூடிய மிகப்பெரிய மரம். மிதமான அளவு கனமுடையது; இதனைப் பிளப்பது மிகக் கடினம். ஒரு கன அடியின் எடை சுமார் 8 கி.கி. இருக்கும். அழகான வரிகளுடையது; இளம் பழுப்பு நிறமுடையது. அறைகலன்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. விமானங்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது.

Symbol: சின்னம்: சுருக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படும் அடையாளக் குறியீடு.

Symmetrical: செவ்வொழுங்கு : உறுப்புகள் இருபுடைய ஒத்திசைவாக அமைந்திருந்தல்.

Synchronization: ஒருங்கிசைவுறுத்தல்: தொலைக்காட்சியிலும், திரைப்படக் காட்சியிலும், ஒளியும் ஒலியும் ஒன்றி ஒருங்கிசைந்து இயங்கும்படி செய்தல்.

Synchrotron: மின்காந்த இணை

யமைவு: மின்மவிசைப் பெருக்க மூட்டப் பயன்படும் மின்காந்த விசை இணையமைவு.

Synchronous motor: (மின்.) இணக்க மின்னோடி: மின் வழங்கும் மின்னாக்கியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் வேகம் நிலையாக இருக்கும் மின்னோடி.

Syncline: (மண்.) மை வரை மடிவுப் படுகை: பாறை கீழ்முகமாக மடிந்திருத்தல்.

Synthesis: செயற்கைப்பொருளாக்கம்: தனிமங்களிலிருந்து அல்லது தனிக்கூட்டுப் பொருள்களிலிருந்து ஒரு செயற்கைச் சேர்மப் பொருளை ஆக்குதல்.

Sinthetic: (குழைம.) செயற்கைப் பொருள்: தனிமங்களிலிருந்து அல்லது எளிய கூட்டுப் பொருள்களி லிருந்து செயற்கையாகச் செய்யப்பட்ட வேதியியல் கூட்டுப் பொருள்.