பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

571

T

Tab: (வானூ.) கட்டுப்பாட்டுத் துணைப் பகுதி: கட்டுப்பாட்டு விசையைக் குறைக்க அல்லது விமானத்தைச் சமநிலப்படுத்துவதற்குக் கட்டுப்பாட்டுப் பரப்புடன் இணைக்கப்பட்ட துணைக் கட்டுப்பாட்டுப் பகுதி.

Tabernacle: (க.க.) தொழுகைத் தலம்: கிறிஸ்துவர்களின் சர்ச் அல்லது தொழுகைத் தலம்.

Tabernacle: (க.க.) வழிபடு யறை: வழிபாட்டுக்கான உருவம் வைக்குமிடம்.

Taboret (மர. வே.) சிறுமேசை: சிறிய முக்காலி அல்லது உயரம் குறைந்த மேஜை. பெரும்பாலும் தாவரங்கள், அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுவது.

Tabular matter: (அச்சு.) அட்டவணை மானி: பெரும்பாலும் கோக்கப்பட்ட எண்கள் பத்திகளாக அடுக்கப்பட்டவை.

Tabulate: பட்டியலிடு: பொருட்களை அல்லது தகவல்களை அட்டவணையாக அல்லது பட்டியலாக வகைப்படுத்து.

Tachometer:(பொறி.) விசை மானி:தண்டுகளின் வேகத்தை ஒரு நிமிடத்துக்கு எத்தனை சுழற்சிகள் என்று காட்டும் கருவி.

Tackle: (எந்.) பாரந் தூக்கு கலன்: பளுமிக்க பொருட்களைக் கட்டித் தூக்குவதற்குப் பயன்படும் சங்கிலி: கயிறு, கப்பி அல்லது பிளாக்குகள்.

Tack: (அச்சு.) பசைப்பு: அச்சு மையில் அடங்கிய வார்னிஷ் சற்று கெட்டியாவதால் அச்சு மையில் ஏற்படும் பிசு பிசுப்பு.

Taenia: (க.க.) தலைப்பட்டி: கிரேக்க டோரிக் பாணி கட்டடங்களில் தூண்கள் மேல் அமைந்த உத்தரத்துக்கும் அதற்கும் மேலே உள்ள சிறு கவர்களுக்கும் நடுவில் அமைந்த தட்டையான பட்டை,

Tail: (வானூ.) விமான வால்:விமானத்தின் பின்புறப் பகுதி. பொதுவில் நிலைப்படுத்தும் பலகைகள் அல்லது துடுப்புகள் அடங்கியது இவற்றுடன் விமானத்தின் தூக்கிகள், சுக்கான்கள் ஆகிய கட்டுப்படுத்தி பரப்புகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Tail beam or tail joist (க. க.)வால் உத்தரம்: தலை உத்தரத்துடன் வந்து சேருகிற உத்தரம்.

Tail boom: (வானூ.)வால் தண்டு : வால் பகுதிகளையும், பிரதான