பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்மையுள்ள, கம்பியாக இருக்கத் தக்க பளபளப்பான வெள்ளை நிற உலோகம். பெரிதும் மின் பல்புகளிலும் ரேடியோ குழல்களிலும் இழையாகப் பயன்படுவது, கம்பியாக, தண்டாக விற்கப்படுவது.

Tap: புரியாணி உள்வரி இழைப்புக் கருவி புரியிடுதல்: புரிதண்டு கொண்டு புரிகளை அமைத்தல். (எந்.) உள்ளிடைப் புரிகளை அமைப்பதற்கான புடைத்த புரி களைக் கொண்ட கருவி,(கியர். வரை) ஒரு துளையிடப் பட வேண்டுமென்பதற்கான குறியீடு.

Tap bolt: (எர்.) புரியிடப்பட்ட தாழ் துளை: பொதுவில் முழு நீளத்துக்கும் புரியிடப்பட்ட தாழ். தலை யின் அடிப்புறத்திலும் படியும் இடத்திலும் மட்டும் சீர் செய்யப்பட்டது. இந்த தாழ்களின் தலை சதுர அல்லது அறுகோண வடிவில் இருக்கும்.

Tape: (பொறி.) அளவிடு பட்டை: லினன் அல்லது பருத்தி அல்லது மெல்லிய உருக்கினால் செய்யப்பட்ட வளையத்தக்க அளவுச் சாதனம். பொதுவில் வட்ட வடிவ உறைக்குள் இருக்கும். பயன்பாட்டுக்குப்பின் மீண்டும் சுருட்டி உள்ளே அடக்கி விடலாம்.

Taper: (எந்.) குவிந்தமைதல்:படிப் படியாக, சீராக அளவு குறுகிக் கொண்டு வருதல். குவிந்த குழிவு. குவிந்த தண்டு, குவிந்த நடுத் தண்டு என்பதுபோல.

575

Taper attachment : (எந்.) குவிய இணைப்பு: குவிந்து அமையும் வகையில் கடைவதற்கு ஒரு லேத்தில் பொருத்துவதற்கான சாதனம். அளவுக்குத் தக்கபடி இதில் மாற்றம் செய்ய இயலும்.

Tapered - shank drill (எந்.) குவியத்தண்டுக் குடைவி: குவிந்து செல்லும் நடுத்தாங்கி கொண்ட, சாதாரண குடைவுச் சுழல்வியில் அல்லது குழிவில் பயன்படுத்தப்படுகிற, திரும்புகிற அல்லது அப்படி அல்லாத குடைவி.

Tapered spindle: (எந்.) குவியத் தண்டு: குவியத்தண்டு வேலைக் கருவி அல்லது தண்டைப் பொருத்தும் வகையில் ஒரு புறத்தில் உள் பகுதியில் குவிந்து அமைந்த துளை உள்ள தண்டு.

Taper gauge : (எந்.) குவியளவு மானி: உள்ளே அல்லது வெளியே எந்த அளவுக்கு குவிந்து அமைந் துள்ளது என்பதை துல்லியமாக அளக்கும் கருவி.

Taper per ft : (எந்.) அடி வீதம் குவிதல்: குவிந்தமைவது எந்த அளவில் உள்ளதை வெளிப்படுத் தும் முறை அதாவது ஜார்னோ குவிவு (அல்லது குவியம்) அடிக்கு 6" பிரவுன் மற்றும் ஷார்ப் குவிவு அடிக்கு 5". பத்து மட்டும் வராது.

Taper pin : (எந்; பொறி.) குவிய ஆணி:உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை