பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Tensile: (பொறி.) இழுதன்மையுடைய: எளிதில் அறுந்து விடாமல் நீளமாக இழுக்கத்தக்க, நீட்டத் தக்க ,இழுதிறன் கொண்டது.

Tensile strain: (பொறி.) விறைப்பாற்றல்: நீளவாட்டில் இழுத்தல் அல்லது நீட்டுதல் நிலையில் ஏற். படும் எதிர்ப்பு, நசுக்குவதற்கு நேர் மாறானது.

Tensile strength: (பொறி.) இழுதாங்கு வலிமை: இழுக்கும் விசையை எதிர்த்து நிற்க ஒரு உலோகக் கட்டை அல்லது பொருளுக்குத் தேவையான வலிமை. (இயற்) பிய்த்துக் கொள்ளும்வரை ஒரு பகுதி தாங்கி நிற்கிற, நேரடியாக செலுத்தப்படுகிற இழுவிசை இது ஒரு சதுர அங்குல குறுக்குப் பரப்புள்ள தண்டை உடைப்பதற்குத் தேவையான இவ்வளவு பவுண்ட் விசை என எண்களில் அளிக்கப் படுகிறது.

Tensile stress: (பொறி.) இழுப்புத்தாங்கு விசை: ஒரு தண்டு அல்லது ஒரு பொருள் இழுப்புக்குள்ளாகும் போது அதை எதிர்த்துத் தாங்கி நிற்பதற்காகத் தோன்றும் விசை.

Tension: இழுவிசை: இழுக்கின்ற அழுத்தலுக்கு நேர் எதிரானது.

Tension spring: (எந்.) இழுப்புவிசை சுருள்வில்: இழுக்கும் விசையின் கீழ் செயல்படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இழுப்பு விசை திருகு சுருள்வில்.

Terminal:(க.க.) முடிவிடம்:


581

சுழல் படிக்கட்டு தாங்கு தூண் அல்லது தாங்கு தூணின் பூச்சு. (மின்) மின் சாதனம் ஒன்றுக்கும் வெளி

சர்க்கியூட்டுக்கும் இடையிலான இணைப்பு நிலை,

Term of patent: காப்புரிமைக் காலம்: ஒருவருடைய காப்புரிமைக்கு முழுப் பாதுகாப்புக் காலம். இது நீட்டிப்பு எதுவும் இன்றி பதினேழு ஆண்டுகள் தொடங்கும்.

Ternary steel: (உலோ.) உருக்கு கலோகம்: இரும்பு, கார்பன், மற்றும் ஏதேனும் ஒரு விசேஷத் தனி மம் கலந்த எல்லா வகையான கலோக உருக்குகளுக்குமான பொதுப் பெயர்.

Terneplate: (உலோ.) மட்டத் தகரம்: காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள்.

Terrace: (க.க.) படிவரிசை: ஒரு புறம் செங்குத்தாக அல்லது சரிவாக உள்ள புல்வெளி போன்று, சரிமட்டமான மேட்டுப் பரப்பு.

Terracotta: சுட்ட களி: கட்டடங்களின் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற சுட்ட களி.

Terrazzo flooring: கல்துண்டுத் தரை: கருங்கல் துண்டுகளும் சிமென்டும் கலந்து பரவியது போன்று மெருகு ஏற்றப்பட்ட