பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Text : (அச்சு.) வாசகம்: ஒரு நூலில் அல்லது அச்சிடப்பட்ட வேறு ஏதேனும் ஒன்றில் அடங்கிய வாசகம்.

Text type: (அச்சு.) வாசக எழுத்து அலகு வகை:அச்சிடப்பட்ட எழுத்துக்களின் வடிவளவைக் குறிக்கின்ற அலகு.

T - head engine; (தானி.) T தலை என்ஜின்: T என்னும் எழுத்து போன்ற வடிவமைப்பு கொண்ட மோட்டார் பிளாக்கின் குறுக்கு வெட்டுப் பகுதி. வால்வுகள் என்ஜினில் இரு புறங்களிலும் அமைந் திருக்கும். எனவே ஒரு கேம் ஷாப்டுகள் இரு கேம் ஷாப்ட் டிரைவ் கீர்கள் தேவை. விலையுயர்ந்த கட்டுமானம்.

Theorem : தேற்றம்: எண்பிக்கத் தக்க ஓர் உண்மை. நிரூபிக்கப்பட வேண்டிய ஒரு கூற்று.

Theoretical : கொள்கையளவில்: ஒரு கருத்துக் கோட்பாடு தொடர்பான அல்லது அளவுச் சார்ந்தன; அனுமான; கற்பிதமான.

Theory : கோட்பாடு: ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ள கவனிப்புகள் அல்லது தோற்றங்கள் பலவற்றை விளக் கும் முயற்சி.

Therlo : (உலோ.) தெர்லோ:தாமிரம், அலுமினியம், மாங்கனீஸ் ஆகியவை அடங்கிய கலோகம்.

Thermal conductivity: (பற்.)

588

வெப்ப கடத்து திறன்: (பற்றவைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன், அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறுவதற்கு முந்தைய நிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட வெப்ப ஊது குழல் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

Thermal jet engine: (வானூ.) வெப்ப ஜெட் என்ஜின்: பின்புறமான பீச்சுக்கு வாயுக்களை விரிவாக்க வெப்பத்தைப் பயன்படுத்தும் ஒரு ஜெட் என்ஜின். இது விமான ஜெட் என்ஜினின் வழக்கமான வடிவம.

Thermal reaction: (குழை.) வெப்ப விளைவு: திடவடிவைப் பெறுகையில் வேதியியல் விளைவால் பிளாஸ்டிக்கில் தோன்றும் வெப்பம்.

Thermal unit: (இயற்.) வெப்ப அலகு: வெப்பத்தைக் கணக்கிட அல்லது ஒப்பிடுவதற்குத் தேர்ந் தெடுக்கப்படும் அலகு. இதர அளவுகளின், ஒப்பிடுவதற்கான நிர்ணய அலகு.

Thermit: (பொறி.) மீவெப்பூட்டி: அலுமினியப் பொடியும் இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடும் கலந்த பொடி. தெர்மிட் (பொடி வைத்துப் பற்ற வைத் தல்) முறையில் பற்றவைப்பதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.