பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590

விரலாலும் இயக்க முடிகிற திருகுமரை

Thumb plane : (மர.வே.) சிறு இழைப்புளி: (இழைப்புளி) 4 அல் லது 5 அங்குல நீளம உள்ள சிறிய இழைப்புளி, ஓர் அங்குல அகலமுள்ள இழைப்புத் துண்டு கொண்டது .

Thumb screw: (எந்.) நக திருகாணி: கட்டைவிரல். நகத்தைப் பயன்படுத்தி திருகிவிடக் கூடிய திருகாணி.

Thumb tack: அழுத்து ஆணி: அகன்ற தலை கொண்ட கூரான முனை கொண்ட ஆணி. வரை படக் காகிதம் நகராமல் இருக்க அதன் ஒரங்களில் பொருத்தி வைக்க வரைபடக்காரர்கள் பயன்படுத்துவது.

Thurm: செங்குத்தான சதுரக் கட்டைகள்: பலகைகளில் ரம்பத்தைக் கொண்டு அறுப்பது, கடை சலில் தோன்றுவது போன்ற பாணிகளை உண்டாக்குவது.

Tie: (க.க.) செருகு துண்டு: மற்ற துண்டுகள் விழாமல் அவற்றின் இடத்தில் இருப்பதற்காக ஒரு துண்டைச் செருகுதல் அல்லது சேர்த்தல்.

Tie beam: (க.க.) வரிக்கை; கட்டு உத்தரம்: முக்கோண வடிவக் கூரையில் அமையும் சாய்வு உத்த ரங்களின் கீழ் துணிகள் விலகி விடாதபடி தடுக்கிற அல்லது

நிலையாகச் சேர்த்து வைக்கிற உத்தரம்.

Tie dyeing : கட்டுச் சாயம்:சாயம் ஏற்றும் போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன.

Tie piece : கட்டு துண்டு: விறைப்பேற்றுவதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத்துண்டு. இது வரை படத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை.

Tier ; அடுக்கு: பெட்டிகள் அடுக்கப்பட்டது போல ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது.

Tiering machine : அடுக்கும் எந்திரம்: ஆட்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமின்றி, பொருட்களை ஒன்றன் மீது ஒன்றாக அல்லது வரிசையாக அடுக்கும் பணியைச் செய்யும் எந்திரம்.

Tie rod : (தானி. எந்.) இணைப்புத் தண்டு : ஒரு மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களை இணைக்கும் குறுக்குத் தண்டு: வண்டி திருப்பப்படும் போது சக்கரங்கள் இணைந்து செயல்பட உதவுகிறது.

Tie-up material: (அச்சு.)கட்டு நிலை: கோக்கப்பட்ட எழுத்துக்களை