பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592

குதிரை சக்தி கிடைக்கின்ற வகையில் என்ஜின் வால்வுகளையும், கிராங்க்ஷாப்டையும் அவற்றின் உரிய இடத்தில் அமைத்தல்.

2. பிஸ்டனின் முகப்பு மீது மிக அதிகபட்ச பயன் பிளவு ஏற்படுகிற வகையில் பிஸ்டனின் மேற்புற செயலுறா நிலைக்கு ஏற்ப எரிதலைத் துண்டிக்கும் உறுப்பைப் பொருத்துகிற நிலை.

Timing gear: கால ஒழுங்கு பல்லிணை: மோட்டார் வாகன என்ஜினில் கேம்ஷாப்டை இயக்கும் பல் லிணைகள். பிஸ்டன்களின் இயக்கத்துக்கு ஏற்ப கால ஒழுங்குடன் வால்வுகள் திறந்து மூட கேம் வடிாப்ட் உதவுகிறது. கிராங்க் ஷாப்ட் இருமுறை சுழன்றால் கேம் ஷாப்ட் ஒரு முறை சுழலும். எனவே இந்த கியர்கள் இயக்கம் 2 - க்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.

Timing marks: (தானி.) கால ஒழுங்குக் குறியீடு: எரிதல் என்ஜின் பிளைவில் அல்லது இயக்கச் சமநிலை மீதும் முதல் நம்பர் சிலிண்டர் எரிதலுக்குத் தயாராகிற நிலை மிகச் சரியாகப் பொருந்தி நிற்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்பட்டுள்ள குறியீடுகள்.

வால்வு: மெக்கானிக்குகள் வால்வுகளை பிஸ்டன் நிலைக்கு ஏற்ப கால ஒழுங்கு இருக்கும் வகையில் அமைப்பதற்காக வால்வு மீதுள்ள குறியீடுகள். |

Tin; (உலோ.) ஈயம்: வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். அடர்த்தி எண் 7.3. தொழில் காரியங்களுக்கு, குறிப்பாக கலோகங்களைத் தயாரிக்க மிக முக்கியத்துவமும், விலை மதிப்பும் கொண்டது.

Tincture: சாராயக் கரைசல் மருந்து வகை: ஒரு பொருளிலிருந்து கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கப்படுகிற மிக நன்கு கரைகிற, நைசான பகுதிகள்.

Tinder : எரி துண்டு : தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகத் தீயில் போடப்படுகிற உலர்ந்த, எளிதில் எரியக்கூடிய பொருள்.

Tinning : (உலோ.) ஈயம் பூசுதல் : (1) தகரத் தயாரிப்பில் இரும்புத் தகடுகள் மீது அளிக்கப் படுகிற மெல்லிய பூச்சு.

(2) பற்று வைப்புக்கோல் மீது அதைப் பயன்படுத்தும் முன்னர் பற்று வைப்புப் பொருளைப் பூசுவது.

Tin plate : தகரத் தகடு : ஈயம் பூசப்பட்ட மெல்லிய உருக்குத் தகடு,

Tin smith : தகர வேலைக்காரர்:தகரத் தகடுகளைக் கொண்டு பொருட்களைத் தயாரிப்பவர்.

Tin snips: (உலோ. வே.) தகர வெட்டுக் கத்திரி : உலோகத்