பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Leg

396

Lev


லது திருகாணியை இறுக்குவதற்கு இடப்புறமாகத் திருகும் வகையில் அமைந்த திருகிழை.

Legend: நீளம்: பிழம்புருவின் மூவளவையில் கழிமிகையாள அளவைக் கூறு: ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு உள்ள தூரம், கால நீட்சியையும் குறிக்கும்.

Length: (அச்சு.) விளக்க வாசகம்: ஒரு படத்திற்கான விளக்க வாசகம்.

law: (மின்.) லென்ஸ் விதி: "ஒரு தூண்டு மின்னோட்டத்தின் திசையானது. எப்பொழுதும் அதன் காந்தப் புலன், தூண்டு மின்னியக்க விசையினை உருவாக்குகின்ற காந்தப் புலனின் வலிமையில் ஏற்படும் மாறுதலை எதிர்க்கும்’ என்பது லென்ஸ் விதியாகும்.

Leopard wood: வேங்கை மரம்: தென் அமெரிக்க மரம். இது கடினமானது; பல வண்ணப் புள்ளிகளுடையது. இது அலங்கார மேலொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

Letter board: (அச்சு.) கடிதத்தாள் படிவம்: கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும்.

Letter press; எழுத்து அச்சுப் பொறி: எழுத்துகளைப் படியெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம்.

Letter-press printing: (அச்சு.) அச்செழுத்தில் அச்சிடல்: அச்செழுத்துகளில் அல்லது புடைப்பெழுத்துகள் உள்ள தகடுகளில் அழுத்த அச்சிடுதல்.

Letter-size drills: (உலோ.வே.) எழுத்து வடிவத் துரப்பணங்கள்: இவை A முதல் Z வரையிலான எழுத்துகளின் வடிவில் அமைந்திருக்கும். A வடிவம் சுமார் 15/64" விட்டமுடையது. Z வடிவம் சுமார் 13/32" விட்டமுடையது.

Letter spacing: எழுத்து இடைவெளியாக்கம்: அச்சுப்பணியில் எழுத்துகளிடையே இடைவெளியை அதிகப்படுத்திச் சொற்களை விரிவுபடுத்துதல்.

Level: (1) கிடைமட்டம்: கிடை மட்டமான தளத்தில் கிடைமட்ட நிலை.

(2) மட்டக் கருவி: கிடைமட்டத்தைப் பார்ப்பதற்கான கருவி:

(3) ஒலியாற்றல்: தொலைக்காட்சியில் அனுப்பீடு செய்யப்படும் ஒலியின் ஆற்றல் அளவு. இது 'டெசிபல்' கணக்கில் அளவிடப்படும்.

Leveling instrument: (பொறி.) தளமட்டக் கருவி: ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக கோட்டில் இருக்கும் போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக் குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளு