பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Toggle bolt : (மின்.) இறுக்கத் தாழ்ப்பாள்: உள்ளீடற்ற ஒட்டினால் ஆன சுவரில் பொருத்துவதற்கானது. இதில் திருகாணியின் தலைப்புறத்தில் சுழலும் வளையம் இருக்கும். இதைத் திருப்பி நீளவாட்டு நிலைக்குக் கொண்டு வந்து அதில் தாழ்ப்பாளை மாட்டலாம். பின்னர் அதை செங்குத்து நிலைக்குத் திருப்ப முடியும்.

Toggle switch : (மின்.) இறுக்க மின்விசை மாற்றுக் குமிழ் : குமிழ் அல்லது நீட்டிக்கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின் விசை மாற்றுக்குமிழ்.

N

Tolerance : (எந்.) ஏற்கைப் பிசகு : தயாரிக்கப்பட்ட எந்திர உறுப்புகளின் அளவுகள் ஏற்கத் தக்க அளவு கூடக் குறைய இருப்பது. ஏற்கத்தக்க அள வுக்கு உள்ள அளவுப் பிசகு, (எந்தி.) ஏற்கை வரம்பு என்றும் குறிப்பிடப்படும்.

Toluene : (வேதி.) சாயப் பிசின்: நிலக்கரித் தா ரிலிருந்து தயாரிக்கப்படுவது. இது முக்கியமாக சாயப் பொருட்களையும், T.N.T. தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

Toncan metal : (உலோ)

595

டொங்கன் உலோகம் : மிகவும் நேர்த்தியான கார்பன் மிகக் குறைவான உருக்கு அல்லது இரும்பின் வர்த்தகப் பெயர். அரிமானத்தை நன்கு எதிர்த்து நிற்பதால் உலோகத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது.

Tone : (வண்.) வண்ண நயம்: = வண்ணச் சாயை (நிறம்) ஒரு வண்ணத்தின் தன்மை அல்லது அளவை அது அழுத்தமாக உள்ளதா அல்லது லேசாக உள்ளதா என்று குறிப்பிடுவது.

Tongs: இடுக்கி: ஒரு பொருளைப் பிடித்து எடுப்பதற்கு அல்லது ஒரு பொருளை அடித்து, தட்டி வேலை செய்ய அதை நன்கு பற்றிக் கொள்வதற்குப் பயன்படும் இரு புயங்களைக் கொண்ட கருவி.

Tongue: (மர.வே.) நாக்கு: ஒரு சட்டம் அல்லது பலகையின் ஓரத்தில் தக்க வடிவில் வெட்டி உருவாக்கப் பட்டு அளவில் சிறியதாகத் துருத்தி நிற்கிற பகுதி. இது இன்னொரு சட்டம் அல்லது பலகையில் தக்க வடிவில் வெட்டி அகற்றப்பட்ட பள்ளமான பகுதியில் நன்கு பொருந்தி இரண்டையும் நன்கு சேர்க்க உதவுகிறது.

Tool bit (எந்.) வேலைக் கருவித் துண்டு: உயர்வேக உருக்கினால் ஆன சிறிய துண்டு. வேலைக் கருவிப் பிடிப்பானில் வைக்கப்பட்டு வெட்டு வேலைக் கருவியாகப் பயன்படுவது.