பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

உராய்வு, அல்லதுபிடிமான உராய்வு.

Tractor air plane:(வானூ.)டிராக்டர் விமானம் : தாங்கு பரப்புகளுக்கு முன்புறமாக அமைந்த சுழலி அல்லது சுழலிகளைக் கொண்ட விமானம்.

Tractor propeller : (வானூ.) டிராக்டர் புரொப்பல்லர் : (விமான) விமான என்ஜினின் முன்புற முனை மீது அல்லது சுழலித் தண்டுக்கு முன்புறமாக அமைந்த சுழலி,

Trade union :தொழிற் சங்கம் : உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத் தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு.

Traffic beam : (தானி.எந்.) முகப்பொளிக் கற்றை : மோட்டார் வாகன முகப்பு விளக்கிலிருந்து தரையை நோக்கிப்படுகிற ஒளிக் கற்றை, எதிர்வரும் வாகன ஒட்டி யின் கண் கூசா வண்ணம் இருக்க ஓர் ஏற்பாடு. நகரங்களின் சாலைகளில் இது பயன்படுவது, ஊருக்கு வெளியே ஒட்டிச் செல்கையில் எதிரே வாகனம் வந்தால் பயன்படுவது.

Traffic control projector : (வானூ.) ஒளி சமிக்ஞை காட்டி : விமான ஓட்டிக்கு ஒளி சமிக்ஞைகள் அளிப்பதற்கான ஒருபுரொஜக்டர்.

Trailing edge : (வானூ.) பின்புற முனை : வியானக் கட்டுப்பாட்டுப் பரப்பு அல்லது சுழலியின் பின்புற முனை.

Train ; டிரெயின் (பணிக்கூடம்): விசையை செலுத்தவும், வேகத்தை மாற்றவும் ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்ட கியர்களின் ஏற்பாடு.

Trammel : தண்டு வட்டவரைவி : பெரிய வட்டங்களைப் போடுவதற்கு உதவும் வட்ட வரைவி. புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏற்பத் தலைப்பகுதியை அதில் உள்ள ஸ்குரு கொண்டு முடுக்கிப் பயன்படுத்தலாம்.

Transept : (க.க.) இரு புறத் தாழ்வாரம் : சிலுவை வடிவில் அமைந்துள்ள சர்ச்சின் நுழைவாயி லின் மறு கோடியில் இரு புறங்களிலும் நீண்டு அமைந்துள்ள தாழ்வாரங்கள்:

Transfer : மாற்று : ஒன்றை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அகற்றுதல்.

Transfar calipers : (எந்.) மாற்றும் காலிபர் : இடுக்குகளையும் அத்துடன் அளந்த பின்னர் பணி நிலையிலிருந்து அகற்ற அளவை மாற்றியாக வேண்டியுள்ள இடங்களிலும் அளப்பதற்கான கருவி.