பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பணிநிலையிலிருந்து எடுத்த பின் கால்களை அளக்கப்படும் பகுதியின் மிகச் சரியான அளவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

Transfer molding : (குழை.) மாற்றிடும் அச்சு : உள் வீச்சு வார்ப்புக்கு அதாவது வெப்பம் அளிக்கப்பட்டு குளிர்ந்த பின் உறுதியாகிய பொருட்களை வார்ப்பதற்கு மற்றொரு பெயர்.

Transformer: (மின்.) மின் மாற்றி: மின்னோட்டத்தில் மின்னழுத்தத்தையும், மின் அளவையும் உயர் நிலையிலிருந்து குறைந்த நிலைக்கு அல்லது குறைந்த நிலையிலிருந்து உயர்நிலைக்கும் மாற்றுவதற்கான சாதனம்

Transistor : (மின்.) டிரான்சிஸ்டர்: (மின்) மின்னணு சர்க்கியூட்டுகளில் முன்னர் வெற்றிடக் குழல்கள் செய்து வந்த பனிகளைச் செய்கின்ற அடக்கமான சின்னஞ் சிறிய பொருள். வடிவில் சிறியது. சூடேறாதது. உடனடியாகச் செயல்படுவது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் வாய்களைக் கொண்ட தீவிர அரைக்கடத்திக் கருவி.

Transistor radio : டிரான்சிசஸ்டர் ரேடியோ.

Transit : கோண - நிலை அளவீட்டுக் கருவி : இக் கருவியானது

52

601

(1) பார்ப்பதற்கு தொலை நோக்கி (2) அளவுகள் குறிக்கப்பட்ட வில்கள், கிடைமட்ட, செங்குத்துக் கோணங்களை அளப்பதற்கு ஒரு வெர்னியர் (3) சம நிலை மட்டம் (4) சம நிலைப்படுத்தும் ஸ்குருக்களுடன் ஒரு முக்காலி. ஆகியவை அடங்கியது. (சர்வே) கோணங்களை அளக்கவும், பேரிங்குகளை நிர்ணயிக்கவும், சமநிலை காணவும் சர்வேயர்களும், என்ஜினியர்களும் பயன்படுத்தும் கருவி.

Transite : (உலோ.) டிரான்சிட்ஸ் : கல்நார் இழையையும், போர்ட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர்.இவ்விதம் உருவாக்கப்பட்டபொருள் தீப்பிடிக்காத சுவர்கள், கூரை ஆகியவற்றைத் தயாரிக்கவும், அடுப்பு சூளைக்குள் உள்பரப்புப் பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Transition strip: (வானூ.)விமான ஓரப் பாதை: விமான நிலையத்தில் ஒடு பாதை அல்லது இதர கெட்டிக்கப்பட்ட பரப்புக்கு அருகே உள்ள விமான இறங்கு வட்டாரத்தின் ஒரு பகுதி. இது உடைத்த கற்கள் அல்லது வேறு தகுந்த பொருட்களால் கெட்டிக்கப் பட்டது. விமானம் பத்திரமாக இறங்கவும் ஓடுபாதையில் அல்லது மேற்படி ஓரப்பகுதியில் எந்தத் திசையிலும் தரையில் ஒடவும் இப் பாதை உதவும்.