பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

602

Transit man : டிரான்சிட் உதவியாளர் : ச்ர்வேயர் அல்லது என்ஜினியர் பயன்படுத்துகிற டிரான்சிட் கருவியைக் கையாளுபவர். அவர் ஒரு பட்டதாரி என்ஜினியராக இருக்கத் தேவையில்லை.

Translucent : ஒளிக்கசிவு : ஒரளவு ஒளி ஊடுருவுகிற (காகிதத் தயாரிப்பு) பளபளப்பான நேர்த்தி கொண்ட, பூச்சு உள்ள அட்டை,

Transmission : (தானி.) செலுத்தீடு : மோட்டார் வாகனத்தின் பின் பகுதியில் உறுப்புப் பெட்டிக்குள் கியர் கள் அமைந்துள்ள ஏற்பாட்டைக் குறிப்பது இதில் ஏற்படுகிற மாறுதல்களின் விளைவாக வேக விகிதத்தில் மாற்றம், முன் புறத்தை நோக்கி இயக்கம், பின் புறத்தை நோக்கி இயக்கம் ஆகியவை சாத்தியமாகின்றன.

Transmitter: (மின்.) ஒலிப்பரப்பனுப்பீட்டுக் கருவி: தொலை பேசிக் கருவியில் பேசுகின்ற முனையைக் குறிக்கும். இது இரு தட்டையான கரிம மின் வாய்சள் உள்ளன.இவற்றில் ஒன்று அசையும்.

Transmitting set : அனுப்பு சாதனம்: குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மாறலை அல்லது தொடர்ச்சியான ஊர்தி அலையைத் தோற்றுவிப்பதற்குப் பயன்படும் சாதனம்.

Transmutation : (மின்.) தனிம மாற்றம் : ஒரு த னிமத்தை வேறு தனிமமாக மாற்றுதல் (காண்க ரச வாதம்) கதிரியக்கத்

தன்மை கொண்ட ரேடியத் தயாரிப்புகளிலிருந்து வெளிப்படும் துகள்களைக் கொண்டு தாக்குவதன் மூலம் சமீப ஆண்டுகளில் தனிமங்களை வேறு ஒன்றாக மாற்றுவது சாதிக்கப்பட்டுள்ளது. சைக்ளோட்ரானைப் பயன்படுத்தி இதைச் சாதிப்பது மற்றொரு முறை.

Transom : (க.க.) சிறு சாளரம்: (கட்டட) ஒரு கதவு அல்லது ஜன்னலுக்கு மேலாக உள்ள சிறு கதவு.

Transombar : (க.க.) நடுச் சட்டம் : கதவை, ஜன்னலை இரண்டாகப் பிரிக்கிற கிடைமட்டமாக அமைந்த நடுச்சட்டம் இதன் பலகை மேல் பகுதியை மட்டும் தனியே திறக்க முடியும்.

Transparency : ஊடுருவு புகைப்படம் : இதுவும் ஒரு ஒளிப்படமே எனினும் இது ஒளி ஊடுருவுகின்ற பிலிம் வடிவில் அமைந்த படம். ஒளியில் காட்டுவதன் மூலமே படத்தைக் காண இயலும்,

Transparent : ஒளி ஊடுருவுகிற : பொருட்களைத் தெளிவாகக் காண்கிற வகையில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது.

Transpose : மாற்றிப்போடு: ஒரு சமன்பாட்டில் ஒரு புறத்திலிருந்து மறு புறத்துக்கு உறுப்புகளின் சமத்துவ நிலை மாறாமல் இருக்க மாறிய அடையாளக் குறியுடன் மாற்றிப் போடுதல் .