பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Trap : நீராவி பொறியமைவு: நீராவியால் வெப்பமேற்றும் முறைகளில் நீர் படிதலையும், காற்றையும் ரேடியேட்டர் குழாய் முதலியவற்றிலிருந்து நீராவியைச் செலுத்தாமல் வெளியேற்றுதல்.

Trap door : (க.க.) கள்ளக் கதவு: தரையில், மச்சுப் புறத்தில் அல்லது கூரையில் அமைந்த திறப்பை மூடுவதற்கான கதவு அல்லது மூடி,

Trapezium : நாற்கரம் : எந்த இரு பக்கங்களும் இணையாக இல்லாத நான்கு புறங்களைக் கொண்ட வடிவம்.

Trapezoid : கோடகம் : நாற்கரம் கொண்ட உருவம். இதில் இரு புயங்கள் இணையானவை(கணித) பரப்பு = இணையாக உள்ள பக்கங்களின் கூட்டுத் தொகையில் பாதி X செங்குத்துக் கோட்டின் நீளம்.

Trap rock : இடைப்பாறை : மிக உறுதியான, உழைக்கக் கூடிய பாறை : வெட்டி எடுப்பது கடினம். சாலைகள் அமைக்கவும், ரயில் தண்டவாளங்ளுக்குத் தளமாகவும் பயன்படுவது.

Trass : பூச்சுக் கலவை (குழை.): ஒரு வகையான சாம்பல், மஞ்சள் அல்லது வெண்மை நிற மண், எரிமலைகள் உள்ள பகுதிகளில் சாதரணமாகக் காணப்படுவது. நீருக்கடியில் நன்கு கெட்டிப்படுகிற சிமென்ட் தயாரிப்புக்குப் பயன்படுவது.

608

Traveling crane: நகரும் பளுத்தூக்கி : நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்துக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது. பொதுவில் மேலிருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன் அடிப்பகுதி குறுக்குத் தண்டு மீது அமைந்தது. இத்தண்டின் முனைகள் இணையாக அமைந்த தண்டவாளங்கள் மீது உட்கார்ந்திருக்கும்.

Treacle stage : டிரேசில் ஸ்டேஜ்: (குழை.) வெப்பமாக்கப்பட்டபின் குளிர்ந்ததும் கெட்டியாகின்ற பிசின் திரவ நிலையில் இருப்பது.

Tread : படித்தரை : கட்டுமானபடியின் சம தரையான பகுதி. படியேறுகையில் பாதங்களை வைக்கும் பகுதி.

Treadle : (எந்.) மிதித்தியக்கும்: காலால் இயக்குகின்ற எந்திரத்தின் பகுதி.

Trefoil: மூவட்ட: (க.க.) ஒன்றிணைந்த மூவட்ட அலங்காரப் பகுதி.

Treillage: (க. க.) பங்தல்: கொடிகள் படர்ந்து அமைவதற்காகப் போடப்படும் பந்தல்.

Trench: நெடுபள்ளம்: (பல நெடும் பள்ளம்) குழாய்களைப் புதைப்பது போன்று தரையில் அமைக்கப்படுகிற நீண்ட குறுகிய பள்ளம்.

Trend: நிலவரம்: பொதுவான போக்கு.