பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டுக்கும் பிளாஸ்டருக்கும் இடையில் உள்ள இணைப்புகளை மறைப்பதற்கு மரம் அல்லது உலோகத் தால் ஆன பகுதிகள். (காகிதத் தயாரிப்பு) காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட காகிதத்தின்-ஒரம் வெட்டுவதற்கு முன்-மிக அதிகபட்ச அகலம்.

Trim: டிரிம்: ஒரு விமானம் திருப்பாமல், ஏறி இறங்காமல் பறக்கிற நிலையில் காற்று வீசும் அச்சுக்கும், விமான அச்சுக்கும் இடையிலான கோணம். (கட்டிட) கதவு, பல கணி ஆகியவற்றைச் சுற்றிலும் உள்ளே அல்லது வெளியே அமைந்த வடிப்பு வேலை அல்லது இதர நேர்த்தி வேலை.

Trim angle: டிரிம் கோணம்: கடல் விமானத்தின் மிதவைப் பகுதி, பறக்கும் படகின் உடல் பகுதி' இவற்றின் கிடைமட்டக் கோட்டுக்கும், நீளவாட்டுக் கோட்டுக்கும் இடையிலான கோணம். மேம் கூறியவற்றின் முன்புறப் பகுதி. பின்புறப்பகுதியை விடத் தூக்கலாக இருந்தால் கோணம் நேர் மறையானது.

Trimmer arch: (க.க.) நீள் வளைவு: கணப்பு மேலுள்ளது போன்று சற்று தட்டையான வளைவு.

Trimmers :(க.க) டிரிம்மர் : மரப்பலகைகள், உத்தரங்கள் கொண்டு தரைத்தளம் அமைக்கும் போது பயன்படும் தாங்கு உத்தரம்.

605

Trimming dies : (எந்.) பிசிறு நீக்கு அச்சுகள் : நீட்டப்பட்ட அல்லது வேறு வகையில் உருவாக்கப்பட்ட உலோகப் பொருட்களின் ஒரங்களில் உள்ள பிசுறுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அச்சுகள்.

Trimming joist (க.க.) டிரிம்மிங் உத்தரம் : அலர் பிதுக்கங்கள் மேல் அமைந்த உத்தரத்தைத் தாங்கும் உத்தரம்.

Trim size : ஒரம் வெட்டிய அளவு : ஓரங்கள் வெட்டப்பட்ட பின் பைண்ட் செய்யப்பட்ட பின்னர் உள்ள பக்கத்தின் அளவு.

Trip hammer : (எந்.) விழு சம்மட்டி : விசை மூலம் இயங்கும் சம்மட்டி. இந்த வகை சம்மட்டியில் சம்மட்டி உயரே சென்ற பின் அது தானாகக் கீழே விழுகின்ற மாதிரியில் ஏற்பாடு இருக்கும்.

Triphibian (வானூ.) முத்திற விமானம் : நிலம், நீர், விழுபனி, அல்லது ஐஸ் கட்டிக் தரையிலிருந்து கிளம்புவதற்கு அல்லது இறங்குவதற்கு வசதியான அடிப் புற சாதனம் கொண்ட விமானம்.

Triplane (வானூ.) மூவிறக்கை விமானம் : ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று இறக்கைகள் அமைந்த விமானம்.

Triple case: (அச்சு.) மூன்று கேஸ் ; வெவ்வேறான மூன்று வடிவங்களில் உள்ள எழுத்து