பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608

கள் உள்ளன. பொத்தான் பொருத்துவதற்கு அல்லது கண் அமைக்க இவ்விதம் துளையிடப் படும்.

Tub-sizing: (அச்சு) தொட்டி முக்கு: காகிதத்தின் மேற்பரப்புக்கு நேர்த்தி அளிப்பததகாகக் கூழ் பூச்சு அளிக்க பெரிய காகிதச் கருளை கூழ் தொட்டியில் முக்குதல்

Tubular axle: (தானி.) குழல் அச்சு: உருக்கினால் ஆன குழலினால் செய்யப்பட்ட அச்சு.

Tubular radiator : (தானி.) குழாய்முறை வெப்பமகற்றி : வெப்பம் அகற்றும் சாதனம். பல சிறிய குழாய்களைக் கொண்டது. இவற்றின் வழியே நீர் பாய்ந்து செல்லும் போது வெப்பத்தை எடுத்துக் கொண்டு குளிர்விப்பு நடைபெறு கிறது.

Tudor style : (க.க.) டியூடர் பாணி : டியூடர் வம்ச அரசர்கள் இங்கிலாந்தை ஆண்ட காலத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைப் பாணி. பொதுவில் எட்டாம் ஹென்றி மன்னர் காலத்தைக் குறிப்பது.

Tufting: குஞ்சத் தையல்: மெத்தை பதித்த இருக்கைகளில் உள்ளே இருக்கிற மென்பொருள் இடம் நகராமல் இருக்க அதையும் போர்த்து துணியையும் சேர்த்து தைத்தல். குஞ்சத் தையல் போட்ட இடத்தில் போர்த்துத் துணியை

கெட்டி நூல் அறுத்து விடாமல் இருக்க ஒரு பொத்தான் அமைக்கப்படும். அது பார்வையையும் அளிக்கும்.

Tulip tree : துலிப் மரம் : (மரம்) போப்லார் அல்லது துவிப்போப்லார் எனப்படும் மரம். லேசான மஞ்சள் நிறம் கொண்டது. மென்மையானது. வேலைப்பாடுக்கு எளியது. வெள்ளை ஊசியிலை மரம் போல இதைப் பலவகைக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

Tumble : பிசிறு உருட்டு : வார்ப்படப் பொருட்கள். அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கப்பட்ட உடன் ஒரு பெரிய பீப்பாயில் போட்டு உருட்டுதல். ஒன்றோடு ஒன்று நன்கு உராயும் போது பிசிறுகள் அகன்று இப்பொருட்கள் சுத்தமாகி விடும்.

Tumbled : (அச்சு.) புரண்டு போதல் : அச்சிடப்பட்ட தாளை மேலிருந்து கீழாகப் புரட்டிப் பார்ப் பது. இது தவிர்க்கப்பட வேண்டும். வலமிருந்து இடமாகத்தான் புரட்ட வேண்டும்.

Tumbler gear : புரட்டு கியர் : வரிசையான பல கியர்களில் நடுவில் அமைந்த கியர்.இயக்கப்பட்ட கியரின் திசையை பின்புறமாக மாற்றுவதற்கு இது உதவும்.

Tuner : அலைத்தேர்வி : தேவையான குறிப்பிட்ட ரேடியோ அலைகளை மட்டும் தேர்ந்