பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெடுத்து மற்ற அலைகளை நிராகரிக்கும் வகையில் சரியமைக்கப்படுகிற கன்டென்சர் சர்க்கியூட்.

Tung oil : (வண்.) டங் ஆயில் : சீனாவிலும், ஜப்பானிலும் காணப்படும் டங் மரத்தின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், வார்னிஷ் உலர்விகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது. சீன மர எண்ணெய் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு.

Tungsten:(வேதி.) டங்ஸ்டன: சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின் பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் டங்ஸ்டேட் (Na2 W04) வடிவில் மரம், துணிகளின் மீது தீப்பிடிக்காத தன்மை அளிக்கப் பயன்படுகிறது.

Tungsten carbide : டங்ஸ்டன் கார்பைட் : மீதேன் அல்லது ஹைட்ரோ கார்பன் வாயுவில் வைத்து பழுக்கக் காய்ச்சிய டங்ஸ்டனை கரிம முறையில் தயாரிக்கப் பட்ட இரும்புப் பழுப்புப் பவுடர். இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது இது கோபால்ட் அல்லது வேறு கெட்டிப்படுத்தும் பொருளுடன் சேர்க்கப்பட்டு கட்டியாக்கப்பட்டு அதைக் கொண்டு உயர்வேக

58

609

வெட்டு உலோகம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் வேலைக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உலோகப் பொருள் விடியாமெட்டல், கார்போலாய், போரான் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்பட்ட வெட்டுக் கருவிகள் முன்னர் இருந்தவற்றை விட 3 முதல் 5 மடங்கு வேகத்தில் வெட்டுபவை. இது விலை உயர்ந்தது என்றாலும் பல அமைப்புகள் செலவுக்கு ஏற்ப இது உழைக்கிறது என்று கருதுகின்றனர்.

Tungsten lamp : (மின்.) டங்ஸ்டன்டன் பல்பு : டங்ஸ்டன் உலோகத்தால் ஆன மெல்லிய கம்பியை இழையாகக் கொண்ட மின்சார பல்பு.

Tungtew steel : (உலோ.) டங்ஸ்டன் உருக்கு : வெட்டு வேலைக் கருவிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் கலோக உருக்கு.

Tuning : (மின்.) இயைவிப்பு : ரேடியோ அலைகளைப் பெறும் சர்க்கியூட்டின் மின் பண்புகளை மாற்றி, நாம் விரும்புகிற குறிப்பிட்ட சிக்னல்கள் நன்கு தெளிவாகவும், வலுவாகவும் பெறும்படி செய்தல்.

Tunnel engineer : (பொறி.) சுரங்கப் பொறியர் : போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மலைகள் ஊடாகவும்