பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மடிக்கும் எந்திரம். வாளி அல்லது புனலின் விளிம்பு போன்று அமைக்க வல்லது.

Tnrn meter: (வானூ.) திரும்பு மீட்டர்: விமானம் ஏதாவது ஒரு பக்கம் திரும்புகையில் அவ்விதம் திரும்புகிற விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அச்சிலிருந்து எந்த அளவில் உள்ளது என்பதைக் காட்டுகிற கருவி.

Turmeric: (வேதி.) மஞ்சள்: சீனா, கிழக்கிந்தியா மற்றும் பல வெப்ப மண்டல நாடுகளில் விளையும் பயிரிலிருந்து பெறப்படுவது. மஞ்சள் தாள் தயாரிப்புக்கு இது மஞ்சள் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. காரப் பொருள்களை சோதிப்பதற்கு இத் தாளைப் பயன்படுத்தும்போது மஞ்சள் தாள் பழுப்பு நிறமாக மாறும். மருத்துவம், உணவுப் பொருள்களுக்கு நிறம் ஏற்றவும், துணிகளுக்கு சாயமேற்றம் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

Tupentine : (வண்.) டர்பன்டைன் : நீண்ட இலை பைன் மரத்தண்டிலிருந்து வடித்து எடுக்கப்படும் திரவம். பெயிண்டை நன்கு பூச அதைக் கரைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Turret : (க.க) துருத்து : பெரிய கட்டடத்தில் பொதுவில் ஒரு மூலையில் சில சமயங்களில் பிதுக்கத் தூண்களிலிருந்து மேலெழும்பி நிற்கும் சிறு கோபுரம் காமிராவில் பல லென்சுகள்

611

அமைக்கப்பட்ட ஓர் ஏற்பாடு. நான்கு லென்சுகளில் எதை வேண்டுமானாலும் முன்னே வரும்படி செய்து கொள்ள முடியும்.

Turret lathe: சுழல் கோபுர கடைசல் எந்திரம் : கடைசல் எந்திரத்தில் வெவ்வேறான வேலைக் கருவிகள் ஒரு சுழல் உருளையில் கீழ் நோக்கி செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். எதையும் கழற்றி பொருத்த வேண்டிய அவசியம் இன்றி தேவையான வேலைக் கருவியை முன் கொண்டு வந்து நிறுத்தி இயக்கலாம்.

Tuscan : டஸ்கன் : (க.க.)புராதன கட்டடக் கலையின் ஐந்து வகையில் நுணுக்க வேலைப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ள கட்டடக் கலை வகை.

Tueyre : காற்றுத் திறப்பு : இரும்புக் குழம்பு உள்ள தொட்டிக்குள் "காற்று பெட்டி' மூலம் காற்றைச் செலுத்துவதற்காக தொட்டியினுள் அமைந்த திறப்பு.

Tweezers : (அச்சு.) சிறு சாமணம் ; சாமனம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை,அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமா னால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது.

Twill: சாய்வரித் துளி: நெசவுப் பாலை காரணமாக துணியின்