பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612

மேற்பரப்பில் சற்று மேடான குறுக்காகச் செல்வது போன்ற கோடுகள் காணப்படும்.

Twin ignition: (தானி.) இரட்டைத் தீ பற்றுகை: இரு பற்றவைப்பு உள் எரி என் ஜினில் ஒரே சமயத்தில் அல்லது மாறி மாறி வாயுக் கலவை தீப்பற்றும் வகையில் அமைக்கப்பட்ட இரட்டை பிரிப்பு முனைகளைக் கொண்ட ஏற்பாடு.

Twin-six engine: (தானி.) இரட்டை ஆறு என்ஜின்: 6 சிலிண்டர்களைக் கொண்ட இரு ஜோடி, 60 டிகிரி கோணத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

Twist bits: (மர.வே.) திருகு துண்டுகள்: உலோகத்தில் துளையிடப் பயன்படுத்தப்படும் திருகு துளைக் கருவிகள் போன்றவை. ஆனால் இவை சிறிய துண்டுகள். கருவியைப் பொருத்தப்படுபவை. இவற்றில் திருகு வரிப்பள்ளங்கள் பக்கம் பக்கமாக இருக்கும். மரத்தில் ஸ்குருக்களை இறக்குவதற்கான துளைகள் போடப் பயன் படுபவை.

Twist drill: (எந்.) திருகு துளைக் கருவி: உலோக உருளைத் தண்டில் இரு புரிகள் பக்கம் பக்கமாக அமைந்து மேலிருந்து கீழாக நுனி வரை இறங்கும், உலோகம், மரம் இரண்டிலும் பயன்படுத்த இவை தயாரிக்கப்படுகின்றன. துளைத் தண்டு ஒரே சீராக இருக்கலாம். அல்லது கீழ்ப்புறத்தில் குவிந்தும் இருக்கலாம்.

Two-filament bulbs: (காண்க.) இரு இழை பல்புகள்: இரட்டை இழை பல்பு.

Two-line letter: (அச்சு) இரு வரி எழுத்து: ஒரு வாசகத்தின் முதல் எழுத்து; பெரிய அளவிலானது. இதன் உயரம் இரு வரிகள் அளவுக்கு உள்ளது.

Two-on: (அச்சு.) டு ஆன்: ஒரே சமயத்தில் அதிகப்பிரதிகளை அச்சிட இரண்டு அல்லது அதற்கு மேலான "பாரங்களை’ அமைத்தல்.

Two-phase: (மின்.) இருஃபேஸ்: இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள்.

Two-phase alternator: (மின்.) இரு ஃபேஸ் மின்னாக்கி: பல ஃபேஸ் நேர் திசை மின்சார மின்னாக்கிஃபேஸ் 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற வகையில் இரு வகை மின்னோட்டங்களை அளிக்கும் சுற்றுகளைக் கொண்டது.

Two-speed rear axle: (தானி.எந்.) இரு வேக பின் அச்சு: இந்த ஏற்பாட்டில் பின்புற அச்சில் இரு வேகச்சுற்றுக்கு அதாவது ஒற்றை வேக அச்சில் கிடைப் பதைப் போல இரு மடங்கு வேகத்துக்கு வழி செய்யப்படுகிறது, குறிப்பாக லாரிகளில் இவ்விதம் செய்யப்படும். இதனால் என்ஜின் தேய்மா-