பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616

மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட விளக்கொளி என்பது, விளக்கின் ஒளிமையத்திலிருந்து கிடைமட்டத் தளத்தில் பரவும் சராசரி ஒளித் திறன் ஆகும்.

Unit of magnetic flux : (மின்) காந்தப்பாய்வு அலகு : ஒரு காந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ள காந்த விசை வழிகளின் மொத்த எண்ணிக்கை. இது, ஒரு காந்தச் சுற்று வழியில் பாயும் காந்த ஒட்டமாகக் கருதப்படுகிறது.

Unit of magnetic intensity: (மின்.) காந்த அடர்த்தி அலகு : காந்த இயக்க விசையின் அலகு. காந்தச் சுற்று வழியின் மூலமாக காந்தவிசை வழிகளைச் செலுத்தும் காந்த அழுத்த விசை.

Unit of magnetic reluctance : (மின் .) காந்தத் தடை அலகு : காந்த மூட்டிய பொருளினால் காந் தப்பாய்வுக்கு ஏற்படும் தடையின் அளவு.

Unit power plant : (தானி.) மின்னாக்கி அலகு : உந்து ஊர்தியில் மின்னாக்கம் செய்வதற்கான எந்திரப் பகுதிகளின் முழுத் தொகுதி. இதில் மின்னோடி. மின் செலுத்தி, மின்னோடியின் துணைக் கருவிகள் அனைத்தும் அடங்கும்.

Unit stress : (பொறி.) அழுத்த விசை அலகு : ஓர் அலகு பரப்புப் பகுதியின் மீது ஏற்படும் அழுத்த

விசையின் அலகு. இது பெரும் பாலும் ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனை பவுண்டு என்ற கணக்கில் குறிப்பிடப்படும்.

Universal : இன முழுதளாவிய : இயல்பாகப் பல பொருள்களுக்கும் உரித்தகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம்.

Universal grinding machine : (பட்.) பொதுசாணை எந்திரம் : சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முளை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம், இது நீள் உருளைச்சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் பயன்படுகிறது.

Universal joint ; (எந்.) பொது இணைப்பு : ஊடு அச்சுகள் நேர் கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு வகை இணைவமைவு.

Universal milling machine : (எந்.) பொது வெட்டு எந்திரம் : ஊடுவெட்டாகவும், நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான ஓர் எந்திரம். இதில் சுழலும் வெட்டு கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுகருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும்.