பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Universal saw table : (மர. வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை,

Unlimited ceiling: (வானூ.) வரம்பற்ற உயர எல்லை: மேகமட்டம் 9,000 அடிக்கு மேற்பட்ட நிலையில் விமானம் தங்கு தடையின்றிப் பறப்பதற்கான உயரத்தின் எல்லை.

Unshielded carbon arc welding: காப்பற்ற கார்பன் வில் பற்ற வைப்பு: காப்புக்கருவி எதுவுமின்றி கார்பன் வில் பற்றவைப்பு முறை.

Unshielded metal arc welding: காப்பற்ற உலோக வில் பற்றவைப்பு: வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை.

Up - holsterry: (மர. வே.) மெத்தை வேலைப்பாடு : அறை கலன்கள் முதலியவற்றுக்கு மெத்தை, திண்டு பொருத்தும் வேலைப்பாடு.

Up keep : (தானி.) பேணுகைச் செலவு : உந்து ஊர்திகளைப் பேணிக் காப்பதற்கான செலவு.

Upper case : (அச்சு.) மேலின எழுத்து : அச்சுக் கலையில் சிறிய எழுத்துக்களிலிருந்து வேறுபட்ட

54

617

தலைப்பு எழுத்துக்களைக் குறிக்கும் மேலின எழுத்துகள்.

Up right : (க.க.) பாரந் தாங்கி : கட்டிடத்திற்குத் தாங்கலாக அமையும் தூண் அல்லது கம்பு.

Uranium : (உலோ.) யுரேனியம்: (விண்மம்) அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம், கடினமான, தகடாக நீட்டக்கூடிய உலோகம். மிகு வேக எஃகுகளின் வலிமை யினையும், விறைப்புத் தன்மையினையும் அதிகரிப்பதற்கு இது பயன்படுகிறது. இயற்கையான யுரேனியத்தில் U-285, U-238 என்ற இரு முக்கிய ஓரகத் தனிமங்கள் உள்ளன. இயற்கை யுரேனியத்தின் 140 பகுதியில் ஒரு பகுதி U-235 என்பதாகும்.

Urea: (குழை.) யூரியா: பால் உணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியா ஃபார்பால் டி ஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாரிக் கப்படுகிறது.

Urea resin: (குழை.) யூரியா பிசின்: பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால் டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினைபுரிவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது பதங்கெடுவதைத் தடுக்கக் கூடி