Vaccum fuel Šupply : (தானி.) வெற்றிடமுறை எரிபொருள் அளிப்பு: பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர்ந்த மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது. என்ஜின் ஒடும் போது கார்புரேட்டரில் தோற்றுவிக்கப்படும் வெற்றிடத் தின் பலனாக வெற்றிடத் தொட்டியில் ஒரளவு வெற்றிடம் பராமரிக்கப்படுகிறது.
Vaccum gauge : (தானி.) வெற்றிட அளவுமானி : ஒர் என்ஜினின் உள் வாங்கி பல முனைக்குழாயில் அல்லது எரிபொருள் குழாயில் உள்ள வெற்றிடத்தை அளந்து கூறுவதற்கு காற்று மண்டல அழுத்த அடிப்படையில் குறியீடுகள் செய்யப்பட்ட அளவுமானி.
Vaccum metalizing (குழை.) வெற்றிட உலோகப்பூச்சு: ஆவியாக்கப்பட்ட அதாவது மிக நுண் திவலைகள் வடிவிலாக்கப்பட்ட உலோகத்தை (அலுமினியம்) கொண்டு பிளாஸ்டிக் உறுப்புகள் மீது மெல்லிய பூச்சு அளித்தல். இது வெற்றிடத் தொட்டியில் நிகழ்த்தப்படுகிறது. மின்சார இழை மூலம் ஆவியாக்கப்படுதல் நிகழ்த்தப்படுகிறது. உலோகக் குழம்பில் நிறம் சேர்க்கப்பட்டுப் தங்க பித்தளை, அல்லது தாமிர நிறம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. இறுதி தயாரிப்புகளின் மேற்புறம் ஓரளவு உலோகத்தன்மை பெற்றிருக்கும்.
819
Vaccum tube : (மின்.) வெற்றிடக் குழாய் : உள்ளிருந்து வாயு அல்லது ஆவி அகற்றப்பட்ட - மிச்ச மீதியாக சிறு அளவுக்கு இருக்குமானால் அதனால் மின் தன்மைகள் பாதிக்கப்படாத அளவுக்கு வெற்றிடமாக்கப்பட்ட மின்னணுக்குழாய்.
Valley : (க.க.) கூரைப்பள்ளம் :இரு கூரைகளின் சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம். அல்லது அந்தச் சந்திப்பில் உள்ள வடி நீர்ப் பாதை.
Valley rafter : (க.க.) கூரைப் பள்ளச் சட்டம் : இரு கூரைகளின் சரிவு சந்திக்கின்ற பள்ளத்துக்கு அடியில் தெடுக அமைந்த சட்டம்.
Value : (வண்.) உயர் தகவு: ஒரு வண்ணத்தின் அழுத்தம் அல்லது மென்மையைக் குறிக்கும் தன்மை .
Valve : தடுக்கிதழ் : குழாய்களின் வழியே நீர்மம் அல்லது வாயுவின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனம்.
Veive action : (தானி.) நடுக்கிதழ் செயல்பாடு : டைமிங் கியர்கள், செயின் கேம் ஷாப்ட் லிப்டர்கள், வால்வு தொகுப்பு ஆகிய வால்வுகள் திறந்து மூடுவதைக் கட்டுப்படுத்தும் பகுதிகள்.
Valves: (தாணி.) தடுக்கிதழ்கள்: என்ஜின் சிலிண்டர்களுக்குள் அல்லது அவற்றிலிருந்து வாயுக்கள் வெளியே செல்வதை மற்றும் உன்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும்