பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாறும்போது மற்றவற்றின் மதிப்பு மாறாதிருக்கும்.

Variable condenser : (மின்.) மாறு மின்தேக்கி : சில வரம்புகளுக்கு உட்பட்ட மின்தேக்கி. சில வரம்புகளுக்கு உட்பட்டு இதன் திறனை மாற்ற முடியும்.

Variable Motion : (பொறி. ) மாறுபடு இயக்கம் : ஒரு பொருள் சரி சமமான தூரங்களை வெவ்வேறு கால அளவுகளில் கடக்குமானால் அது மாறுபடு இயக்கம் எனப்படுகிறது.

Varnish :(வண்.) வார்னிஷ்: ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை. ஒரு பரப்பின் மீது உறுதியான, நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது.வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம்.

Varying speed motor : (மின்.)வேகம் மாறுபடும் மோட்டார் : செய் சுமைக்கு ஏற்ப வேகம் மாறுகின்ற மோட்டார். பொதுவில் செய் சுமை அதிகரிக்கும் போது வேகம் குறையும். எனினும் விரும்பியபடி வேகத்தை மாற்றத்தக்க மோட்டாரிலிருந்து இது வேறுபட்டது.

Vault : (க.க.) வளைந்த கூரை : அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை.வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம்.


621

V Belt : V. வார்ப்பட்டை : விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை. உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு.

V Blocks: (எந்.) வி. பிளாக்குகள்: உருளை வடிவிலான உலோகப் பொருள்களைச் சோதிக்கும்போது அல்லது உருக்கொடுக்கும்போது நகராமல் இருப்பதற்காக ஒரு புறத்தில் V வடிவில் செதுக்குதல்.

Vector: (மின்.) வெக்டார்: மாறு திசை மின்சாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுகிற பகுதிகளை விளக்கிக் காட்டுகிற படம்.

Vee radiator (தானி.) V ரேடியேட்டர்: இரு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டு நடுவில் 180 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இணைக்கப்பட்டது.

Vegetable tannage : தாவரப் பதனம் : டான்னிக் அமிலம் கலந்த தாவரப் பொருட்களைக் கொண்டு தோலைப் பதப்படுத்துதல்.

Vehicle : (வேதி.) பூச்சு சாதனம் : வார்னிஷ் அல்லது லேக்கரைக் கரைத்துப் பூசுவதற்கான திரவப் பொருள்.

Vellum : வரைநயத் தோல் : தோலினால் ஆன ஆவணம் போன்று தோன்றும் காகிதம்.