பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624

தளத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் நிமிர் நேர் விளிம்புக் குட்டையிலான பகுதி.

Vertimeter : (வானூ.) செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற, இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியா கும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது.

Vestibule : (க.க.) முன் கூடம்: வீட்டின் முன் அறை; திருக் கோயில் முக மண்டபம்.

Viaduct (பொறி.) மேம்பாலப் பாதை: இரும்புப் பாதை, சாலை போன்றவற்றுக்கு மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.

Vibrating bell: (மின்.) அதிர்வு மணி: மணியடிக்கும் நா அல்லது சுத்தி உடைய ஒரு மின் சாதனம். இதன் வழியே மின்னோட்டம் பாயும்போது நா அல்லது சுத்தி ஒரு மணியைத் தட்டி ஒலி எழுப்பும். இது மின்காந்த ஈர்ப்புத் தத்துவத்தின்படி இயங்குகிறது.

Vibration dampeners: (தானி.) அதிர்வுத் தளர்வுறுத்தி: ஒரு கோட்டச் சுழல் தண்டின் அதிர்வினைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எதிர்எடை அல்லது சம நிலைப்படுத்தும் கருவி.

Vibrator col : (மின்.) அதிர்வுச் சுருள்: ஒருவகை தூண்டுச் சுருள், உள்ளீட்டின் காந்தத் தன்மை

யானது அடிப்படைச் சுற்று வழியினை முறிக்கும் வகையில் இயங்குமாறு இது அமைக்கப்பட்டிருக்கும்.

Video: ஒளிக்காட்சி: படம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகையின் பகுதி. அமெரிக்காவில் தொலைக் காட்சியையும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

Viewing mirror: காட்சிக் கண்ணாடி : தொலைக்காட்சியில், படக் குழாயில் உருவாகும் உருக்காட்சியை, பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.

Vignette: (க.க.) சித்திர வேலைப் பாடு: தளிர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு; முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு; முற் காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூ வேலை ஒப்பனைக் கோலம்: பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலைப்பாடு; பெயர்ப்பக்க அடி வரிப் பூ வேலைப்பாடு.

Vinyl acetal resins: (வேதி; குழை.) வினில் அசிட்டால் பிசின்: பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படு கிறது. இது விறைப்புடையது; ஒட்டுந் தன்மை கொண்டது: ஈரம் புக இடமளிக்காதது; ஒளியாலும் வெப்பத்தாலும் நிலை குலையாதது.