பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

680

Water softener: (கம்.) நீர் மென்னாட்கி : வீடுகளில் கிடைக்கும் நீரில் கால்சியம் மக்னீசியம் சல் பேட், பைகார்பனேட் அடங்கியிருந்தால் சோப்பிலிருந்து நுரை வராது. நீரிலிருந்து உட்பொருட்களை அகற்றும் கருவி. இந்த நோக்கில் பயன்படுத்துகிற வேதிப் பொருள்.

Water spots : (வண்.அர.) பூச்சுத் திட்டு: ஒரு பொருளுக்கு வார்னிஷ் பூச்சு அளிக்கும்போது மாறுபட்ட நிறத்துடன் சிறு திட்டுகள காணப்படும் சில சமயங்களில் சற்று ஆழமாகவும் காணப்படும். ஈரப்பசை உள்ளே அமைந்த காரணத்தால் ஏற்படுவது.

Water table: (க.க.) நீர் வடிகை: ஒரு கட்டடத்தைச் சுற்றி சற்று நீட்டிக் கொண்டிருக்கிற சரிவான பலகை மழைநீர் சுவர் மீது விழாமல் இருப்பதற்கான ஏற்பாடு.

Watt: (மின்.) வாட்: மின்சக்தியின் அலகு. இது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கினால் கிடைக்கும் தொகைக்குச் சமம்.

Watt hour (மின்.) வாட் மணி: மின் சக்தியின் பணியை அளக்கும் அலகு. இது ஒருமணிநேரம் ஒரு வாட்டைச் செலவழித்தால் ஆகும் மின்சக்தியின் அளவு.

Wattless current: (மின்.) வாட் இல்லா மின்சாரம்: மாறுமின்னோட்டத்தில் விசையை உற்பத்தி செய்ய வோல்டேஜூடன் சேராத பகுதி.

செயலற்ற பகுதி. செயல் பகுதிக்கு மாறானது .

Watt meter: (மின்,) வாட் மானி : மின சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல் ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம்மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது.

Watt Second: (மின்.) வாட் விநாடி : மின் சக்தியை அளக்கும் அலகு, இது ஒரு விநாடி நேரத்துக்கு ஒரு வாட் செலவழித்தால் ஆகும் மின் சக்திக்குச் சமம்.

Watts per candle: (மின்.) கேண்டில் அளவில் வாட்: ஒரு மின் பல்பு, எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதை இடைமட்டமாக சராசரியாக உற்பத்தியாகிற கேண்டில் பவர் அளவில் வாட் கணக்கில் கூறுவது.

Wave length: (மின்.) அலை நீளம் : இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம் வானொலியைப் பொருத்த வரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் புள்ளிகள் இடையிலான தொலைவு.

Waviness : (குழை.) அலைவம்: மேற்பரப்பு அலை மாதிரியில் வளைந்து அமைதல்.