பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wax: (வேதி.) மெழுகு : உயர் ஒற்றை அணு ஆல்கஹாலின் கரிம உப்பும், மிகுந்த கொழுப்பு அமில மும் கலந்தது. உதாரணம்: தேன் மெழுகு

Wax engreving; (அச்சு.) மெழுகி உருமானம்: மெழுகு அளிக்கப்பட்ட தாமிரத் தகடுகளின் மீது தக்கபடி வடிவம் கொடுத்து பின்னணியை தயார்படுத்தி அதிலிருந்து எலெக்ட்ரோ பிளேட் வகை பிளேட்டைத் தயாரித்து அச்சிடுதல் .

Wax finish: (மர. வே.) மெழுகு நேர்த்தி: மரத்தால் ஆன பொருட்கள் மீது இதற்கென்று தயாரிக்கப் பட்ட மெழுகைப் பூசித் தேய்ப்பதன் மூலம் மிக நைசான நேர்த்தியைப் பெற முடியும்.

Ways: பட்.) சறுக்குப் பள்ளம் : நெடுக அமைந்த சிறுபள்ளம். வேலை செய்யப்படுகின்ற பொருள் அல்லது அதைத் தாங்கிய பொருள் இப் பள்ளங்களின் மீது அமைந்தபடி சறுக்கிச் செல்லும்.

weak sand: (வார்.) சேரா மணல்: வார்ப்பட வேலைக்கான மணலில் சிறு சத அளவுக்குக் களிமண் இருப்பதன் விளைவாக ஒன்று கூடிச் சேராத மணல்.

Wear and tear: தேய்ந்தழிதல் : பயன் காரணமாக மதிப்பில் ஏற்படும் குறைவு.

weather: பருவ நிலை: மரம், கல் அல்லது வேறு ஏதேனும்


681

பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து. உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை.

Weather boards: (க.க.) மழைப் பலகை: கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள் மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு.

Weathering : (க.க.) கட்டுமான முகட்டுத்தளச் சாய்வு : சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்புகள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா மல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற் புறத்தில் ஏற்படும் பாதிப்பு.

Weather strip : (க.க.) கசிவுத் தடுப்பான் : சன்னல், மற்றும் கதவுகளின் வெளிப்புறத்தின் கீழ்ப் பகுதியில் உலோகம், மரம் அல்லது வேறு பொருளில் செய்யப்பட்ட பட்டையை அமைத்தல். கதவு மீது படும் நீர் கீழிறங்கும் போது உள்ளே வராமல் தடுக்கும் ஏற் பாடு.

Web : (எந்.) வெப் : வார்ப்படங்கள் அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் இரு பகுதிகளை இணைக்கும் மெல்லிய தகடு அல்லது பகுதி. (காகிதத் தயாரிப்பு) காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரிப்பு நிலையில் உள்ள அல்லது தயாரிக்கப்பட்ட காகிதம்,