பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

684

போன்று முன் சக்கர மையத்திலிருந்து பின் சக்கர மையம் வரை உள்ள தூரம்.

                                                    Wheel dresser; (எந்.) சக்கரத் தீட்டுக் கருவி அரைப்பு: சக்கரங்களின் வெட்டு முகங்களை மறுபடி கூராக்கவும்,பயன்படும் கருவி.

Wheel hub: சக்கரக் குடம்: ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக் கும்.

Wheel lathe: சக்கரக் கடைசல் எந்திரம்: குறுகிய மேடையும் ஆழமான இடைவெளியும் கொண்ட விசேஷ கடைசல் எந்திரம். சக்கரங்களைக் கடைவதற்குப் பயன்படுவது.

Wheel puller: (தானி.) சக்கர இழுவி: மோட்டார் வாகனச் சக்கரங்களை அச்சிலிருந்து விடுவித்து வெளியே இழுப்பதற்கான கருவி.

wheel window: (க.க.) சக்கரப் பலகணி: சக்கரத்தில் உள்ளது போன்று ஆரைகள் அமைந்த வட்ட வடிவ ஜன்னல்.

Wheel wright: சக்கரப் பணியாளர்: வாகின்கள் அல்லது அலை போன்றவற்றைத் தயாரிக்கிற அல்லது பழுது பார்க்கிற பணியாளர்.

whetting: (எந்.) தீட்டுதல்:


வெட்டு முனையைக் கூறாக்குவதற்காக சிறு துளி எண்ணெய் சேர்க்கப்பட்ட தீட்டு கல்லில் தீட்டுவது.

Whirler: சுழல்வி: மண்பாண்டங்களுக்கு பட்டையிடும் போது அல்லது அலங்கார வேலைப்பாடு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுழல் கருவி.

White antimony: (வண்.அர.) வெள்ளை ஆன்டிமனி: பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற நச்சற்ற வெள்ளை நிறப்பொருள். டைட்டாணியம் ஆக்சைட் பெயிண்ட் போன்று மெல்ல உலரும் தன்மையை அளிப்பது.

White cedar: (மர.வே.) வெள்ளை செடார்: 30 முதல் 50 அடி உயரம் வளரும் மரம். குறுக்களவு ஒன்று முதல் 2 அடி இருக்கும், லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுவது.

White coat: வெள்ளைப் பூச்சு: சிமெண்ட் போன்ற பூச்சு அளிக்கப்பட்ட சுவர் மீது உறுதியான வெள்ளைப் பூச்சு அளித்தல். இப்பூச்சுப் பொருளானது பிளாஸ்டர் ஆஃப் பாரிசும்,சுண்ணாம்புக் குழைவும் அடங்கியது. இதனுடன் சில சமயம் பொடியாக்கப்பட்ட சலவைக் கல்லும் சேர்க்கப்படும். மேல் பூச்சுக்கு ஜிப்சம் குழைவும் பயன் பயன்படுத்தப்படலாம்.