பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி.

Winding stair :சுழல்படி : தொடர்ந்து திசை மாறியபடி உயரே செல்லும் படிகள். படிகள் வளைந்து செல்லலாம். அல்லது நடுவில் திட்டுகளுடன் வளைந்து செல்லலாம். படிகளின் நடுவே உள்ள கிட்டத்தட்ட வட்டவடிவ இடைவெளியானது படிக்கிணறு எனப்படும். இது அகன்று இருக்கும். படிகளின் கைப்பிடியும் சுழன்று மேலே செல்லும்.

Windlass : பாரம்தூக்கும் பொறி: "வண்டி லாசு’’ என்றும் கூறுவது உண்டு.

Wind load : (பொறி.) காற்று விளைவு : ஒரு கட்டுமானம் மீது வீசும் காற்றினால் ஏற்படுகின்ற பாரம்.

Window : (க.க.) பலகணி : ஒரு கட்டடத்தில் அமைந்த பல திறப்புகள். உள்ளே வெளிச்சமும், காற்றும் கிடைப்பதற்காக அமைக்கப்படுவது வேண்டும்போது மூடிக் கொள்ள சட்டங்களுக்குள்ளாக ஒளி ஊடுருவும் பொருள் இணைக்கப்பட்ட ஏற்பாடு கொண்டது.

Window head : (க.க.) பலகணித் தலை: பலகணிச் சட்டத்தின் மேல் பகுதி.

Window jack : பலகணிச் சாரம் :பலகணி அடிச்சட்டத்துடன் பொருந்துகிற, அத்துடன் வெளியே

887

நன்கு நீட்டிக் கொண்டிருக்கிற சிறிய வலுவான மேடை. பொதுவில் பெயிண்ட் அடிப்பவர்கள் பயன்படுத்துவது.

Window seat : (க.க.) பலகணி இருக்கை : பலகணிக்குக் கீழே அல்லது பலகணியின் உள் அமைந்த இடத்தில் பொருந்துகிற இருக்கை.

Wind shake: காற்று வெடிப்பு: மரத்தை வெட்டுவதற்கு முன்னதாக மரத்தின் தண்டுகளில் காற்று காரணமாக ஏற்படும் வெடிப்பு.

Windshield wiper : (தானி.) கார்கண்ணாடித் துடைப்பான் : காரின் முன்புறத்தில் உள்ள கண் ணாடியில் மழைநீர், அல்லது விழு பணி படியும்போது அதைத் தொடர்ந்து அகற்றி ஓட்டுபவருக்கு எல்லாம் தெளிவாகத் தெரிய உதவும் கருவி, எந்திர முறை மூலம் பல வெற்றிட ஏற்பாட்டின் கீழ் மின்சார மூலம் அல்லது கையால் இயக்கப்படுவது. மழைநீரை, விழுபனியை அகற்ற உறுதியான நீண்ட தண்டின் முன்புறத்தில் ரப்பர் பட்டை அமைந்தது.

Wind tee : (வானூ.) காற்று திசைக் காட்டி: காற்று எத்திசையை நோக்கி விசுகிறது என்று காட்டு வதற்கு விமானம் தரை இறங்கும் பகுதியில் அல்லது அருகே உள்ள கட்டுமானத்தின் உச்சியில் 'T' வடிவில் அமைந்த பெரிய காற்று திசைக்காட்டி.