பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

645

Y

Yardage: (பொறி.) யார் டேஜ்: எவ்வளவு மண் தோண்டப்பட்டது. என்பதை கன கெஜத்தில் குறிப் பிடுவதற்குப் பயன்படும் சொல்.

Yard stickல்: கெஜக் கோல்: 36 அங்குல நீளம் கொண்ட, அளவுகள் குறிக்கப்பட்ட நீண்ட மெல்லிய மரச்சட்டம், உலோகத்தில் செய்யப்பட்ட அவ்வித அளவுகோல் 36 அங்குல அளவுகோல் எனப்படுகிறது.

Yaw: (வானூ.) திருக்கை: பறக்கும் பாதைக் கோட்டிலிருந்து கோண இயக்கத்தால் விமான அச்சிலிருந்து வலது புறம் அல்லது இடது புறம் திரும்பும் போக்கு.

Yaw meter: (வானூ.) திருக்கை அளவுமானி: ஒரு விமானத்தின் திருக்கையின் கோணம் எவ்வளவு என்று அளந்து கூறும் கருவி.

Y connection: (மின்.) ஒய் இணைப்பு: மூன்று பேஸ் சர்க்கியூட்டில் பயன்படுகிற கிளை இணைப்பு.

Year ring: (மர,வே.) ஆண்டு வளையம்: இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம். வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு

வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும் ஓர் ஆண்டைக் குறிக்கும். மரம் வளருகையில் சாறு இவற்றின் வழியேதான் உயரே செல்கிறது.

Yellow: (வண்.) மஞ்சள்: அடிப்படை நிறம். நிறமாலையில் சிவப்புக்கும், பச்சைக்கும் இடையே அமைந்துள்ளது.

Yellow ocher (உலோ.) மஞ்சள் பித்தளை: 70 பங்கு தாமிரமும், 30 பங்கு துத்த நாகமும் கலந்த கலோ சும். இது மட்ட ரகக் கலோகம்: உறுதி தேவையற்ற கனிமங்களுக்குப் பயன்படுவது.

Yellow ocher: (வண்.) மஞ்சள் காவி: மண் போன்ற இரும்புக் கனியிலிருந்து பெறப்படும் நிறம். பெயிண்டுகளில் சாயம் அளிக்கப் பயன்படுவது.

Yellow pine: (மர.வே.) மஞ்சள் ஊசியிலை: என்றும் பசுமை மாறாத மரம் இரு வகைப்பட்டது. ஒன்று நீண்ட இலை. மற்றொன்று குட்டை இலை நீண்ட இலை ஊசியிலை வகையின் மரம் அடர்த்தியாக இருக்கும். கனமாகவும், உறுதியாகவும் இருக்கும். பெரும்பாலும் கனத்த உத்திரங்களாகப் பயன்படுத்தப்படும். குட்டை இலை வகை எளிதில் முறியும்.