பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

646

அவ்வளவு உறுதியற்றது. விலையும் குறைவு. செலவு குறைந்த தரைத் தளமாகவும். இதர வகைகளிலும் பயன்படுவது.

Yew: (மர.வே.) யூ மரம்: மெதுவாக வளருகின்ற நடுத்தர அளவுள்ள பசுமை மாறாத மரம். மரத்தின் உள்ளே துணுக்குகள் அடர்ந்து கெட்டியாக இருக்கும். சற்று நெகிழும் தன்மை கொண் டது. ஆரஞ்சு சிவப்பு முதல் பழுப்பு வரையிலான நிறம் கொணடது.

Yield point: (எந்.) முறி நிலை: மாதிரி உலோகத் துண்டு மீது கூடுதல் பளுவைச் சேர்க்காத நிலையில் அது விரிந்து கொடுக்கத் தொடங்கும்போது உள்ள நிர்ப்பந்தத்தின் அளவு.

Yield strength: (பொறி ) வலிமை இழப்பு நிலை: ஒரு உலோகப் பொருள் நிரந்தரமாக நீண்டு போகின்ற நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் பளு.

Yield value! (குழை.) இளறு நிலை: பிளாஸ்டிக் திரவம் போன்று பாய்வதற்கு மிகக் குறைந்தபட்ச அழுத்த நிலை. இதற்கும் குறைவான அழுத்தத்தில் பிளாஸ்டிக் நெகிழும் தன்மை கொண்ட திட வடிவில் இருக்கும். இந்த நிலைக்கும் அதிகமான அழுத்தத்தில் பிசுபிசுப்பான திரவமாக இருக்கும்.

Yoke : (க.க.) மேல் குறுக்கு : பலகணி சட்டத்தில் மேற்புற குறுக்குச் சட்டம். (தொலை) மின்ன ணுக் கற்றையை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் திருப்பி விட மின்னணு காமிரா அல்லது படக் குழாயின் கழுத்துப் பகுதியில் அமைந்த சுருள்கள்.

Z

Zebrano : (மர. வே.) ஜீப்ரானோ : ஆஃப்ரிக்காவின் மேற்குக் கரையைச் சேர்ந்த மிகப்பெரிய மரம். மரம் மிகக் கெட்டியானது. எடை மிக்கது. வலிமை கொண்டது. இதன் சற்று மங்கலான பின்னணி நிறம், கரும்பழுப்பான இணை கோடுகள் காரணமாக இது பார்வைக்கு மிக எடுப்பானது, மிக ந ளினமான மரவேலைப் பொருட்கள், சுவர் மறைப்புப் பலகைகள் ஆகியவற்றுக்கு மிக அரிய மரமாகக் கருதப்படுகிறது.

Zee bar : (பொறி.) ஜீ பார் : கட்டுமான உருக்குத் தண்டு. அதன் குறுக்கு வெட்டு ஆங்கில 'Z' வடிவில் அமைந்து மேற்புறத்தையும் கீழ்ப் புறத்தையும் இணைப்பது. பெரும்பாலும் கப்பல் கப்பல் கட்டு மானத்துக்கும், இதர கட்டுமானங்களுக்கும் பயன்படுவது.