பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

647

Zero : பூச்சியம் : எண்களில் மதிப்பில் சூன்யத்தைக் குறிப்பது. மிகத் தாழ்நதது.

Zero ceiling : (வானூ.) பூச்சிய வரம்பு : 100 அடிக்குக் கீழான மேகக்கூட்டம். விமானம் பறப்பதற்குத் தகுதியற்ற வானிலை.

Zig zag rule : மடியும் அளவு கோல் : அளவு கோலானது மடிக்கும் வசதி கொண்டது. மடித்து விரிக்கும் போது உள்ள நிலையைக் குறிப்பது. மொத்தம் 2 அடி முதல் 8 அடிநீளம் இருக்கும். எனினும் இது தனித் தனியே 6 அங்குலப் பகுதிகள் கொண்டது. இவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை.

zinc : (உலோ.) துதத நாகம் :நிலம் பாய்ந்த வெண்மை நிற உலோகம். கால்வனை சிங் செய்வ தற்கும் கலோகங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுவது.

Zinc chloride : (வேதி.) துத்த குளோரைடு : வெள்ளை நிறமுள்ளது. நீர்த்துப் போகிற உப்பு. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் துத்தத்தை அல்லது துத்த ஆக்ஸைடை சேர்ப்பதன் மூலம் அல்லது துத்தத்தை குளோரினில் எரிப்பதன் மூலம் பெறப்படுவது. பற்ற வைப்புக் காரியங்களுக்கு எளிதில் உலோகத்தை உருக்கத் துணைப் பொருளாகப் பயன்படு வது.

Zinc engraving or etching : (அச்சு) துத்தச் செதுக்கு: துத்தநாகத்தினால் ஆன அச்சுத் தகடு. அச்சிடப்பட வேண்டிய பகுதியை மட்டும் விட்டு விட்டு மீதிப் பகுதியை மட்டும் செதுக்கி அகற்றி விடுதல்.

Zing oxide : (வேதி.) துத்தநாக ஆகசைட் : துத்த நாக கார்பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகப் பவுடர். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது.

Zinc sulphate : (வேதி.) துத்த சல்பேட் : கழிவு துத்தத் துண்டுகளை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவும், மரம் மற்றும் தோல்களை கெடாமல் காக்கவும் பயன்படுவது.

Zing vvhite : (வண்.) துத்த வெள்ளை : பெயின்ட் தயாரிப்புக்கு நிறமியாகப் பயன்படும் துத்த நாகப் பவுடர்.

2inox : (வண்.) ஜினோக்ஸ் : எனாமல் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் துத்த நாக ஹைட்ரேடட் ஆக்ஸைட்.

zoom ; (வானூ.) செங்குத்தான ஏற்றம் : விமானம் செங்குத்தாக உயரே ஏறுவது. அப்போது உயரே ஏறுகின்ற விகிதமானது, சீராகப் பறக்கும்போது கிடைப் பதை விட அதிக அளவில் இருக்கும்.