பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lof

404

lon


பள்ளத்தாக்கிலும், சீனாவிலும் 5 அடி முதல் 1000 அடி ஆழத்தில் கிடைக்கிறது.

Loft dried paper: உயர்தள உள் காகிதம்: மேற்பரப்பு வடிவாக்கம் செய்யப்பட்ட பின்பு உயர்தளத்தில் உலர்த்தப்படும் காகிதம்.

Log : (கணி.) [1] மடக்கை: எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.

(2) மரக்கட்டை: வெட்டப்பட்ட மரத்துண்டு.

Logarithm: (கணி.) மடக்கை: எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங் கெண்,

Loggia: (க. க.) படிமேடை இருக்கை: திறந்த பக்கங்கள் உள்ள படிமேடை இருக்கை.

Logo-type: (அச்சு.) சொற்பாள வார்ப்பு: அச்சு முறையில் இணை யெழுத்து வார்ப்பு.

Logwood : (வேதி.) சாயமரம்: மத்திய அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வளரும் ஒரு வகைச் சாயமரவகை சாயத் தொழிலிலும், மருந்துகளிலும் பெருமளவில் பயன்படுகிறது

Long: குழைமக் களிமண்: குழைம மாகவும் எளிதில் வேலைப்பாடு செய்வதற்கு ஏற்றதாகவும் உள்ள களிமண்.

: (வானூ.) நீள் உடற் பகுதி: விமானத்தின் நீட்டு வாட்டமான உடற்பகுதி.

Long fold: நீள் மடிப்பு: காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது.

Longitude: தீர்க்கரேகை: இங்கிலாந்திலுள்ள கிரீன்விச் போன்ற ஒரு நடுவிடத்திலிருந்து கிழக்கில் அல்லது மேற்கில் உள்ள தூரம்.

Longitudinal dihedral angle : (வானூ.) நிரைகோட்டு இரு சமதள முகக்கோணம்: விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடையிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சமநிலையமைவுக் கோணம் குறைவாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும்.

Longitudinal section. (பட்.)நீளப்பாங்கு வெட்டுவாய்: நீளவாக்கில் வெட்டப்பட்ட பகுதி.

Longitudinal stability:(வானூ.) நீளப்பாங்கு உறுதிப்பாடு: விமானத்தில் சமதளச் சீர்மையில் ஏற்படும் உலைவினைப் பொறுத்த உறுதிப்பாடு.

Long letter: (அச்சு.) நீள் எழுத்து: 'f' என்னும் ஆங்கில எழுத்தினைப் போன்று ஏறுமுக இறங்குமுக வரைவுடைய அச்செழுத்து.

Long screw: (கம்.) நீள் திருகு: சாதாரணத் திருகிழையைவிட