பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

Lunette: தொங்கணிச் சரவிளக்கு: கண்ணாடித் தொங்கணிகள் கொண்ட சரவிளக்கு.

Luster : (கனி.) பிறங்கொளி: ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதி பலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு.

Lute : கலமட்பூச்சு: காற்றுப் புகா மண்ணடைப் பூச்சு.

(2) சீலைமண்: காற்றுப் புகா மண்ணடைப் பூச்சுக்காகப் பயன்படும் பொருள்.

Lye: (வேதி.) கடுங்கார நீர்: மாசு போக்கும் ஆற்றல் வாய்ந்த கழுவு நீர்ம வகை. சோடியம் ஹைட்ராக் சைடு (NaOH), அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) போன்றவை இவ்வகையின. காரப் பொருள் உள்ள பொருளிலிருந்து கரைசலாக அல்லது தூளாக இது எடுக்கப்படுகிறது. இது முக்கியமாக சோப்பு தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.

M

Mechinable: எந்திர வேலைப்பாடு: செய்யத்தக்க: கருவிகளினால் அல் லது எந்திரக்கருவியிலுள்ள வெட்டு கருவிகளினால் வேலைப்பாடு செய்யத்தக்க பொருள்.

Machine: (எந்) எந்திரம்: விசை யாற்றலை உருமாற்றுவதற்கான அல்லது இடமாற்றுவதற்கான ஒரு சாதனம்.

Machine eomposition : (அச்சு.) எந்திர அச்சுக்கோப்பு: எந்திர முறை மூலம் அச்செழுத்துக்களைக் கோத்தல்.

Machine drawing: எந்திர முறைப்பட வரைவு: எந்திரத்தின் அல்லது எந்திர உறுப்புகளின்வரைபடங்களை எந்திரத்தின் மூலம் வரைதல். இதில் குறிப்புகளும், பரிமாணங்களும் பட்டறைத் தகவல்களும் குறிக்கப்பட்டிருக்கும்.

Machine dried: எந்திர உலர்த்து தாள்: எந்திரத்தின் உலர்த்து உருளைகளில் உருட்டி முழுமை உலர்த்தப்பட்ட காகிதம்.

Machine drilling (எந்.) எந்திரத் துரப்பணம்: விசையினால் இயக்கப்படும் எந்திரத்தின் மூலம் துரப்பண வேலைகள் செய்தல்.

Machine finish: எந்திர மெருகீடு : எந்திரத்தின் மூலமாகக் காகிதத் தின் மேற்பரப்புக்கு மெருகூட்டுதல்.