பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

413

செய்வதற்காக நிலைக் காந்தங்களும், ஒரு மின்னகமும் அமைந்திருக்கும்.

Magnet-o-motive force: (மின்.) காந்தவியக்க விசை: ஒரு முழுமையான காந்தச் சுற்று வழியின் நெடுகிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான காந்தம் ஏற்றும் விசை.

Magnet steel: காந்த எஃகு:இது சாதாரணமாக, குரோமியமும் மக்நீசியமும் கலந்த உயர்தரமான எரியும் மின்னிழைம எஃகினைக் குறிக்கும். இது நிலைக் காந்தங்களுக்குப் பயன்படுகிறது.

Magnet wire: (மின்.) காந்தக் கம்பி: மின்னகங்கள், புலச் சுருள்கள், தூண்டு சுருள்கள் முதலியவற் றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது, ஒரே செம்புக் கம்பியிாைலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிடப்பட்டது; செறிவூட்டப் பெறாதது.

Mahl stick: (வண்.) தாங்கு கோல்: ஓவியம் வரைபவர்கள் இடது கைத் தாங்கலாகப் பயன் படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.

Mahogany: சீமை தூக்கு : உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள், மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற் றில் மிகுதியாக வளர்கிறது. இம் மரம் வெட்டியவுடன் இளஞ் சிவப்பு அல்லது வஞ்சிரம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வெயில் படப்படக் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும். அடர்த்தி வேறுபடும் கரணைகள் கவர்ச்சியான உருவங்களில் அமைந்திருக்கும்.

Main bearings: (தானி.) முதன்மைத் தாங்கிகள்: உந்து ஊர்தி எஞ்சின்களில் வணரி அச்சுத் தண்டினைத் தாங்கி நிற்கும் தாங்கிகள் முதன்மைத் தாங்கிகள் ஆகும்.

Mains: (மின்.) மின்வாய்கள்: கிளைமின் சுற்று வழிகளுக்கு மின் விசை வழங்குகிற மின்னியல் கடத்திகள்.

Main shaft: (எந்.) முதன்மைச் சுழல்தண்டு: எஞ்சினிலிருந்து அல்லது இயக்கியிலிருந்து நேரடியாக மின்விசையைப் பெற்று, மற்ற உறுப்புகளுக்கு விசையை அனுப்புகிற சுழல்தண்டு.

Main supporting surface: (வானூ.) முதன்மை ஆதாரப்பரப்பு: விமானத்தில், இறகுகளின் மேற்பரப்பு. இப்பரப்பு விமானம் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது.

Major axis: நெட்டச்சு:ஒரு நீள் வட்டத்தின் நீள் விட்டம்.