பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Maj

414

Man


Major diameter: (எந்.) நீள் விட்டம்: இதனைப் புற விட்டம்’ என்றும் அழைப்பர். ஒரு திருகில் அல்லது சுரையாணியில் உள்ள மிகப் பெரிய விட்டம்.

Make up: (அச்சு.) பக்கத் தயாரிப்பு: அச்சுக்கலையில் அச்சுக் கோத்த எழுத்துகளைப் பக்கங்களாகத் தயாரித்தல்.

Make - up rule: (அச்சு.) பக்கத் தயாரிப்பு வரித்தகடு: அச்சுக்கலையில் பக்கங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எஃகு வரித் தகடு.

Malachite: (கனி.) மாலாஷைட்: தாமிரத் தாதுக்களில் ஒன்று பச்சை நிறமான, அடிப்படைத் தாமிரக் கார்போனேட். மேலேட்டுப் படிவங்களாகப் பெருமளவில் கிடைக்கிறது. 'மலைப் பச்சை' என்னும் பெயரில் வண்ணப் பொருளாகப் பயன்படுகிறது.

Malleable: நெகிழ் திறனுடைய : தங்கம் போன்ற உலோகங்களை உடைந்து விடாதபடி தகடாக நீட்டத்தக்க நெகிழ்திறத் தன்மையுடைய.

Malleable cast iron : (உலோ.) நெகிழ்திற வார்ப்பிரும்பு : ஒரளவுக் குக் கரிம நீக்கம் செய்யப்பட்ட வார்ப்பிரும்பு. இது சாதாரண வார்ப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். இதில் கட்டமைப்புக் கரணையாக இருப்பதற்குப் பதிலாக இழை இருக்கும். கடும் அதிர்ச்சிக்குள்ள

கும் உறுப்புகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது.

Malleablizing : (உலோ.) நெகிழ்திறனுரட்டுதல் : வெண்மை யான வார்ப்பிரும்பிலிருந்து பெரும் பாலான கார்பனை அகற்றுவதற் காக அல்லது கார்பனைச் செம் பதமாக்கிய கார்பனாக மாற்றுவதற்காகப் பதப்படுத்தும் முறை.

Maltose: (வேதி.) மால்ட்டோஸ் : மாவூறலிலிருந்து எடுக்கப்படும் படிக வடிவச் சர்க்கரை , ரொட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.

Management : மேலாண்மை : நிருவாகம் செய்தல்; நெறிப்படுத்துதல்; கண்காணித்தல்; கட்டுப்படுத்துதல்.

Mandrel : (எந்.) குறுகு தண்டு: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் நடுவச்சு. கடைசல் பிடிக்க வேண்டிய பொருளை இதில் பொருத்தி, இதனைச் சுழலச் செய்து கடைசல் வேலை செய்வார்கள்.

Mameeuwer :(வானூ.) நுட்ப இயக்கம் : (1) விமானத்தைத் தேர்ச்சித் திறனுடன் மிக நுட்பமாக இயக்குதல்.

(2) விமானத்தில் சுழன்று பறந்து சாதனை புரிதல்.

Maneuverability: (வானூ.) நுட்ப இயக்கத் திறன்: விமானத்தை எளிதாக இயக்குவதற்கு இடமளிக்கும் நுட்ப இயக்கத்திறன்.