பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Man

415

Man


Manganese : (கனி;) மாங்கனீஸ் (மங்கனம்): கடினமான, எளிதில் உடைந்து போகக்கூடிய உலோகத் தனிமம். பழுப்பான வெண்மை நிறம் முதல் சிவப்பு நிறம் வரை பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது காந்தத் தன்மையற்றது. எஃகு, கண்ணாடி, வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Manganese bronze : (உலோ.) மாங்கனீஸ் வெண்கலம் : ஒர் உலோகக் கலவை இதில் 55%-80% செம்பு, 85% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ் , அலுமினியம், இரும்பு. ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்படுகிறது.

Manganese dioxide (மின்.) மாங்கனீஸ் டையாக்சைடு : மின் கலங்களில் மின் முனைப்பு நீக்கப் பொருளாகப் பயன்படும் வேதியியல் பொருள்.

Manga, : (உலோ.) மாங்கனீஸ் எஃகு : இதில் 0.10% 0.50% கார்பனும், 1.00%-1.80 மாங்கனீசும் கலந்திருக்கும். இது மிக அதிக அளவு விறைப்புத்திறன் உடையது. 8.5% நிக்கல் எஃகுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள மாங்கனிஸ் அளவை அதிகரிப்பதால், இது முறியும் தன்மையுடையதாகிறது.

Manganin : (உலோ.) மாங்கானின்: செம்பு, நிக்கல், அய மாங்கனிஸ் கலந்த உலோகக்கலவை. தரமான தடைச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Manifold : (தானி.) புறம்போக்குக் குழாய்! உந்து ஊர்தி எஞ்சினில் உள்ள புறம் போக்குப் பல் புழை வாய்க் குழாய்கள் இது ஒவ்வொரு நீள் உருளையிலிருந்தும் புறம் போக்கு வாயுக்களைத் தனியொரு புறம்போக்குக் குழாயினுள் செலுத்துவதற்குப் பயன்படுகிறது.

Manifold paper : (அச்சு.) : பல் படித்தாள் : பல படிகளை ஒருங்கே எடுப்பதற்குப் பயன்படும் மென்மை யான காகிதம், *

Manifold vacuum : (தானி.) புறம் போக்குக் குழாய் வெற்றிடம் :எஞ்சின் இயங்கும்போது புறம் போக்குக் குழாயிலுள்ள வாயு மண்டல அழுத்த நிலை,

Manila : சனல் தாள் : சிப்பம்கட்டுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற அல்லது மஞ்சள் பழுப்பு நிறக் காகிதம்,

Manometer: (இயற்.) அழுத்த மானி: ஆவி, வாயு போன்றவற்றின் அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.

Mansard roof: (க.க.) இரு சரிவு மோடு: மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச் சாய்வு செங்குத்தாகவுள்ள இரு சரிவு மோடு.

Mansion: (க.க.) மாளிகை: ஒரு பெரிய அலங்காரமான வீடு.