பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Met

428

Met


டில் வேலைப்பாடு செய்யப்படும்பொருளுக்கு இறுதியாகப் பளபளப் பான மெருகூட்டுதல்.

Metal furniture : (அச்சு.) உலோக அச்சுத்துண்டு:அச்சுக் கோத்துப் பக்கங்களை முடுக்கும் போது இடைவெளிகளை நிரப்புவதற்காகப் பயன்படும் உலோகத் துண்டு. இது அச்செழுத்தின் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும். Metalizing: (குழைம.) உலோக உறையிடல்: பிளாஸ்டிக்கிற்கு ஒரு மெல்லிய உலோகப் படலத்தின் மூலம் உறையிடுதல்.

Metal lacquer : உலோக மெரூகெண்ணெய்: உலோகத்தினாலான பொருள்களுக்கு மெருகெண்ணெயாகப் பயன்படுத்தப்படும் வெடியகப் பஞ்சின் அமில் மற்றும் மெதில் அசிட்டே கரைசல்கள்.

Metallurgy : உலோகக் கலை:உலோகத் தாதுக் களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் அல்லது உலோகக் கலவைகளை உண்டாக்கும் கலை அல்லது அறிவியல், உலோகங்கள் பற்றி ஆராயும் துறை.

Metal pattern: (வார்.)உலோகத் தோரணி: நீண்ட நாட்கள் உழைப்பதற்காக மரத் தோணிகளிலிருந்து உருவாக்கப்படும் வார்ப்படத் தோரணிகன்,

Metal spinning: (பட்.) உலோகத் திரிப்பு: தகடாக்கக் கூடிய உலோகங்களில் இலேசான உறுப்புகளை வட்டமான வார்ப்பு வடிவங்களாக உருவாக்கும்முறை. கடைசல் எந்திரத்தில் வேகமாகச் சுழலும்போது அழுத்தம் கொடுக்கும் போது இந்தத் திரிப்பு ஏற்படுகிறது.

                                                                                                                                                                          Metal spraying : உலோகத் தெளிப்பு: உலோகங்களுக்கான காப்பு மேற்குப் பூச்சு ஒரு கம்பியை ஹைட்ரஜன் -ஆக்சிஜன் சுடர் வழியாகச் செலுத்தும்போது அது அணுக்களாக குறைந்து கம்பி பரப்பில் மேற்பூச்சாகத் தெளிக்கப் பட்டு படிக்கிறது 

Matamorphic rock:(கனிம.) உருமாற்றப் பாறை : தனது மூலப் பண்பியல்பிலிருந்த எரிமலைக் குழம்புப் பாறையாக அல்லது படிவியற் படுகைப் பாறையாக மாற்றம் பெற்றுள்ளப் பாறை

Meteorograph: (வானூ") வானிலைப் பதிவுமானி ; பூமியின் மேற்பரப்பிற்கு மேலேுள்ள வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப், பதிவிட்டு காட்டும் அமைவு. இது வெப்ப நிலை காற்றழுத்தம் ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்யும்.

Meteorology: (இயற்.) வானிலையியல்: வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை

Meter: (எந்.) (1) மீட்டர்: மெட்ரிக் அளவு முறையில் அடிப்படையான நீட்டலளவை அலகு. 1 மீட் டர்=89,87.